35% டார்கெட்! அதிமுகவை நெருங்கும் விஜய்? பாஜக எதிர்ப்பு ஓட்டை உடைக்க திட்டம்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் விஜய் கட்சி தொடங்கியது பற்றி மவுனம் காத்து வந்த நிலையில், இப்போது மறைமுகமா தவெகவை தாக்கிப் பேச தொடங்கியிருக்கிறார். அது அரசியல் களத்தில் என்னவிதமான மாற்றங்களை உருவாக்கும்? விஜய் வளர்ச்சிக்கு அது உதவுமா?
திமுக 'திராவிட மாடல்' ஆட்சியைப் பற்றி தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நேரடியாகவே அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சனங்களை வைத்திருந்தார். கூடவே குடும்ப ஆட்சி என்றும் ஊழல் ஆட்சி என்றும் திமுகவை விமர்சித்திருந்தார். அதிமுக பற்றி அவர் வாய் திறக்கவே இல்லை. அதற்குள் ஒரு அரசியல் கணக்கு இருப்பதாக பலரும் பேசினர். அடுத்த கட்டமாக திமுக ஆட்சியை எதிர்த்து தவெக செயற்குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் இந்த விமர்சனங்கள் எழுவது சகஜம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், திமுகவை நேரடியாக விஜய் தாக்க ஆரம்பித்த பிறகு முதல்வர் ஸ்டாலினோ அல்லது உதயநிதி ஸ்டாலினோ எந்தவித எதிர்ப்பு காட்டாமல் இருந்து வருகின்றனர். கோவை உள்ளிட்ட சில ஊர்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 'யார் புதியதாகக் கட்சி தொடங்கினாலும் திமுகவைத்தான் அழிக்கப்பார்க்கிறார்கள்' என்று மறைமுகமாக விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார். ஒரு காலத்தில் விஜயகாந்த்தை கண்டுகொள்ளாமல் இருந்த திமுக பின்னர் அவரது கூட்டணிக்காகக் காத்திருந்தது. அவர் மறைந்த பிறகு துரைமுருகன் மூலம் கூட்டணி பேரம் தேர்தல் நேரத்தில் இருகட்சிகளிடம் தேமுதிக நடத்துவதாக அம்பலப்படுத்தியது.

இந்நிலையில் விஜய்யைப் பற்றி திமுக பேசாமல் விடுவதால் அவர் தடைப்படுமா? அல்லது அதை மீறி தவெக வளர்ந்து பெரிய சக்தியாக உருவெடுக்குமா? அதைப் பற்றிப் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், "விஜயகாந்த்தை 2006 தேர்தல் களம் வரை மு.கருணாநிதி அங்கீகரித்து கருத்து எதையுமே சொல்லவில்லை. 'ரமணா' படம் வெளியான பிறகு 2004இல் விஜயகாந்த் தன் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து பின்னர் மதுரையில் மாநாடு நடத்தி கட்சியைத் தொடங்கினார். இப்போது விஜயகாந்த் யாருடைய ஓட்டு வங்கிக் கணக்கைப் பாதிப்பார் என்ற விவாதம் எழுந்தது? அது பற்றி கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினர். அவர், 'யாருடைய ஓட்டு வங்கியை அவர் பாதிப்பார் என்பது தெரியாது. ஆனால், அவரது சொந்த வங்கிக் கணக்கு நிச்சயம் பாதிக்கும்' என்று கிண்டலாகப் பேசியிருந்தார்.
அந்தளவுக்குத்தான் விஜயகாந்த்திற்குப் பெரிய கட்சித் தலைவர்கள் முக்கியத்துவம் அளித்தனர். 2006 விஜயகாந்த் 8% வாங்கினார். 2009இல் 10% ஏறினார். 2011இல் அதிமுகவுடன் விஜயகாந்த் சேர இருக்கிறார் எனப் பேச்சு அடிபட்ட போது அவரை திமுக அணிக்கு இழுக்க கருணாநிதி முயன்றார். 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி. கடுமையான மின்வெட்டு. ஆட்சிக்குக் கெட்ட பெயர். பெரும்பான்மைகூட திமுக பெறவில்லை. எனவே ஜெயலலிதா திமுக அரசை மைனாரிட்டி கவர்மெண்ட் என்று கிண்டலாக விமர்சித்து வந்தார்.

2016இல் 'பழம் நவிழு பாலில் விழும்' என்று விஜயகாந்த் கூட்டணி பற்றி கருணாநிதி கூறினார். கடைசி வரை காத்திருந்தார். அதேபோல் திமுக விஜய் பற்றி நேரடியாகப் பேசுவதைத் தவிர்க்கிறது. தேவையில்லாமல் பெயரைச் சொல்லி ஒரு அடையாளத்தைக் கொடுக்கக் கூடாது என வளர்ந்த கட்சிகள் நினைப்பது சகஜம்தான். விஜய் மாநாட்டுக்கு 4 லட்சம் பேர் வந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு ஆளால் 10 ஓட்டுகளைத் திரட்ட முடியுமா? அப்படிப் பார்த்தால் 40 லட்சம் வாக்குகள் வரும். சீமானுக்கு 40 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டில் 6.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 4.5 கோடி பேர் ஓட்டுப் போடுவார்கள். அப்படி எனில் விஜய் 40 லட்சம் வாக்குகள் பெறுவதாக வைத்துக் கொண்டால் 10% கீழ் தான் அவரது வாக்கு வங்கி உள்ளது. இது போதாது. இது ஒரு தோராயமான கணக்கு. இதுவே நிஜம் இல்லை. ஒரு மாநாட்டுக்கு வரும் கூட்டம் முழுக்க வாக்காக மாறுவதில்லை. நாம் விஜய்க்கு 8% வாக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த 8% பேர் திமுக மற்றும் அதிமுகவை விரும்பாததால் விஜய்க்கு வாக்களிக்கிறார்கள். அவர் மீண்டும் இதே கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் இந்த 8% பேர் அதிருப்தி அடைவர். எனவே இந்த சதவீதம் இன்னும் குறையும். கடந்த 2006 மற்றும் 2009 ஆகிய இரண்டு தேர்தல்களை விஜயகாந்த் தனித்தே நின்றார். 2011இல் அதிமுகவுடன் கூட்டணி. அதையே கூட ஜெயலலிதா மன விரும்பி வைக்கவில்லை. வேறு வழியில்லாமல் வைத்தார்.
விஜயகாந்த் கூட அதை விரும்பவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் இந்தக் கூட்டணியை ஏற்படுத்தினார். அதிமுக ஆட்சிக்கு வந்தே ஆகவேண்டிய கட்டாயம். ஜெயலலிதா இறங்கி வந்தார்.தேமுதிகவுக்கு 40 சீட்டுகள் மேல் கொடுத்தார். அவ்வளவு இடங்களை அவர் யாருக்கும் ஒதுக்கியதே இல்லை. விஜயகாந்த் கூட்டணி வெற்றி பெற்று அவர் எதிர்க்கட்சித் தலைவராக வந்து அமர்ந்தார். அதன் பின்னர் நடந்ததை ஊர் அறியும்.
இப்போது அதே இடத்தில் விஜய் இருக்கிறார். அவரை திமுக பேசாமல் விடுவதால் அவர் வளர்ச்சி தடைப்படாது. சீமானைப் பற்றி திமுக தலைவர் பேசியதே இல்லை. சீமான் ஆரம்பத்தில் 2% தான் இருந்தார். இன்று 8%ஆக வளர்ந்துள்ளார். அண்ணாமலையைப் பற்றி ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. ஒரே முறைதான் அவர் பெயரைச் சொன்னார். ஆனால், நஷ்டம் யாருக்கு? செந்தில் பாலாஜியை உள்ளே வைத்தது யார்? அண்ணாமலை வளரவில்லையா? எனவே விஜய்யைப் பற்றி திமுக பேசவில்லை என்றால் அது விஜய் நஷ்டம் இல்லை.
ஒரு திறமையான தலைவர் திரும்பு பக்கம் எல்லாம் தீ வைக்க மாட்டார். அதை உணர்ந்துதான் விஜய் அதிமுகவை விமர்சிக்காமல் உள்ளார். அதிமுக மற்றும் பாமகவை இழுத்து கூட்டணி வைக்க முயல்கிறார். 35% வாக்கு வங்கி இருந்தால்தான் ஒரு அரசியல் கட்சி ஆட்சியமைப்பதைப் பற்றிச் சிந்திக்கவே முடியும் என்கிறார் திருமா. இது சரியான கருத்து. இந்த 35% எந்தக் கட்சிக்காவது இருக்கிறதா? அதை அறிந்துதான் செயல்பட முடியும். பாஜக எதிர்ப்பு வாக்குகள் முழுமையாக திமுக கூட்டணிக்குச் செல்கிறது. அதிலிருந்து ஒரு பகுதியைப் பிரிக்க வேண்டும்.
ஆனால், திமுக எதிர்ப்பு வங்கி பல வகையில் பிரிந்துள்ளது. அதிகமாக அதிமுகவுக்கு அந்த வாக்குகள் போகும். ஆக, ஆட்சி அமைக்க 35% வாக்குகள் தேவை எனும் போது விஜய்யும் அதிமுகவும் ஒன்றாகச் சேர்ந்தாக வேண்டும். வேறு வழியே இல்லை. இதில் நிரூபிக்கப்பட்ட ஓட்டு வங்கி அதிமுகவிடம்தான் உள்ளது. விஜய்யிடம் இல்லை. அப்படி எனில் விஜய்க்கு மாற்று வாய்ப்பே இல்லை" என்கிறார்.
-
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!











Click it and Unblock the Notifications