Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார் பதவிக்காலம் நீட்டிப்பு.. ஆளுநர் ரவி அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.. இதற்கான உத்தரவை ஆளுநர் ஆர்என் ரவி வழங்கி உள்ளார். பழனிகுமாரின் பதவி காலத்தை வருகிற 2024 மார்ச் மாதம் வரை நீடித்து தமிழக ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநிலத்தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான தன்னாட்சி பெற்ற அரசியலைமைப்பாகும்.. தமிழக தேர்தல் ஆணையரின் பங்கு என்பது மிக முக்கியமானது..

The tenure of Tamil Nadu Election Commissioner Palanikumar has been extended till next March

அந்தவகையில், இந்த ஆணையத்தின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார்கள்.. தமிழகத்தில் நடைபெறுள்ள நகராட்சி, ஊராட்சி, மாநாகராட்சி தேர்தலை சரியான முறையில் நடத்துவதே இவரது பணி.

காரணம், கடந்த 2021ம் ஆண்டு, 10 வருடம் கழித்து திமுக தலைமையிலான அரசு பதவியேற்றது. அன்றையநேரத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய முக்கிய பணி திமுக அரசிடம் இருந்தது...

இதன் காரணமாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிக்குமார் கடந்த மே 2021-ல் நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற வேண்டி இருந்த நிலையில், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் , தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை சிறப்பாக நடத்தி முடித்தார்.

The tenure of Tamil Nadu Election Commissioner Palanikumar has been extended till next March

இந்தநிலையில் இவரது பதவி காலம் இந்த மாத இறுதியோடு முடிவடைய உள்ளது.. தமிழகத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி இடங்கள் காலியாக உள்ள நிலையில், அந்த பதவி இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது.. இதனையடுத்து பழனிகுமாரின் பதவி காலத்தை வருகிற 2024 மார்ச் மாதம் வரை நீடித்து தமிழக ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு முதல் ஐஏஎஸ் பொறுப்பில் வகித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் சுற்றுலா மற்றும் பொதுத்துறை என பல்வேறு துறைகளில் பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+