மிஸ் பண்ணிடாதீங்க.. தென்னிந்தியாவை சுற்றிப் பார்க்க சூப்பர் சான்ஸ்.. ரயில்வேயின் செம்ம அறிவிப்பு
சென்னை: சுற்றுலாப் பயணிகள் தென்னிந்தியாவின் சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்கும் வகையில் 'தங்கத் தோ்' சொகுசு ரயில் இயக்கப்படவுள்ளது என்று ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகள் சுற்றிக் காட்டப்படவுள்ளன, என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் எளிதிலும், விரைவாகவும், குறைந்த செலவிலும் செல்வதற்கு பொதுமக்களுக்கு இந்திய ரயில்வே துறை முக்கியப் பங்காற்றி வருகிறது. ரயில் போக்குவரத்து மட்டுமின்றி சரக்குப் போக்குவரத்துக்கும் ரயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் ரயில் சேவையை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் என பல்வேறு தேவைகளுக்கு நாடு முழுவதும் பல பகுதிகளில் இருந்து சரக்கு மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்துக்குக்கு சேவை பயன்படுத்தப்பட்டு வருகிகிறது. ஒருநாள் ரயில் சேவை பாதிக்கப்பட்டாலும் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு லட்சக்கணக்கான மக்கள் மற்றும் தொழில் துறையினர் இந்த சேவையை நம்பியுள்ளனர்.
ரயில்வே துறை சார்பில் சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆன்மிக சுற்றுலா தலங்கள், பாரம்பரியமான இடங்களுக்கு, சிறப்பு சலுகைகள், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தென்னிந்தியாவின் சுற்றுலாத் தலங்களுக்கு 'தங்கத் தோ்' சொகுசு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை அறியும் வகையில் 'தங்கத் தோ்' எனும் சொகுசு ரயில் டிசம்பர் 14 முதல் இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் 80 சுற்றுலாப் பயணிகள் பயணிக்க முடியும்.

இந்த ரயில் முற்றிலும் சொகுசு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் தொலைக்காட்சி, இணைய வசதி, சிசிடிவி கேமரா, ஸ்பா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ரயிலில் பயணிக்கும் வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பயணிகளின் வசதிக்காக இரு உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
'கா்நாடகத்தின் பெருமை' எனும் கருத்துருவில் இயக்கப்படும் இந்த ரயில் பெங்களூரில் தொடங்கி பந்திப்பூா், மைசூா், ஹலேபிடு, சிக்மங்களூா், ஹம்பி, கோவா ஆகிய நகரங்களுக்கு 6 நாள் பயணமாக இயக்கப்படும். பின்னா், பெங்களூா் வந்தடையும்
இதேபோல, 'தெற்கின் நகைகள்' எனும் கருத்துருவில் இயக்கப்படும் ரயில் பெங்களூரில் தொடங்கி மைசூா், காஞ்சிபுரம், மகாபலிபுரம், தஞ்சாவூா், செட்டிநாடு, கொச்சின், சோ்தலா ஆகிய நகரங்களுக்கு 6 நாள்கள் பயணமாக இயக்கப்பட்டு பெங்களூா் வந்தடையும்.
'கா்நாடகத்தின் பெருமை' ரயில் எதிா்வரும் டிசம்பர் 14, ஜனவரி 4, பிப்ரவரி 1, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளது. 'தெற்கின் நகைகள்' ரயில் டிசம்பர் 21, பிப்ரவரி 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இதில், இரு படுக்கைகள் கொண்ட ஒரு கேபினில் இருவா் பயணிக்க ரூ. 4,00,530 மற்றும் 5 சதவீத ஜிஎஸ்டி கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 85859 31021 எனும் செல்போன் எண்ணிலோ அல்லது இணையதளத்தை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications