Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை காட்டாங்குளத்தூர் ஏடிஎம்மில் நடக்கும் உண்மை சம்பவம்.. மறந்தும் இந்த தப்பு வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏடிஎம்களில் பணம் எடுக்க போகிறவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுக்கிறார்கள். அவர்களை குறிவைத்தே வங்கி சேவையில் உள்ள அதேநேரம் ஏடிஎம் சேவை மட்டும் செய்யும் நிறுவனங்கள் ஏடிஎம்களை அமைத்திருக்கும். பல்வேறு தனியார் ஏடிஎம்கள் இருந்தாலும் சில ஏஎடிம்கள் தான் அதிகம்இருக்கும். அங்கு பணம் எடுப்பதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இது தெரியாமல் அதிக முறை பணம் எடுத்து மக்கள் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதுபற்றி பார்ப்போம்.

என்ன தான் டிஜிட்டல் உலகத்திற்கு நாம் மாறினாலும், சாமானிய மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை பலரும் கையில் ரொக்கப்பணம் வைத்திருப்பார்கள். அதற்காக ஏடிஎம்களில் அவர்கள் அடிக்கடி பணமும் எடுக்கிறார்கள். ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. உங்கள் பணத்தை எடுக்க உங்களிடமே கட்டணம் வசூலிப்பது என்பது இப்போது அல்ல பல ஆண்டுகளாகவே உள்ளது. அதேநேரம் ஏடிஎம்களை பராமரிக்க அவர்களுக்கு பணம் தேவை என்பதால், இந்த கட்டணம் வசூலிப்பதை வங்கிகள் நியாயம் என்றே கருதுகின்றன.

The true incident that happened at the Kattankulathur ATM in Chennai Don t forget this mistake

கட்டணம் வசூலிப்பார்கள்

பொதுவாக ரிசர்வ் வங்கியின் விதிப்படி, வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கும், இதர சேவைகளைப் பயன்படுத்துவதற்கும் ரிசர்வ் வங்கி சில வரம்புகளை நிர்ணயம் செய்துள்ளது. அந்த வரம்பைத் தாண்டினால் கணிசமான கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி.

ஐந்து முறை இலவசம்

இதன்படி, நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்மிலேயே பணம் எடுத்தால், மாதத்திற்கு 5 முறை இலவசமாகப் பயன்படுத்தலாம். இதில் பணம் எடுப்பது மட்டுமல்லாமல், பேலன்ஸ் செக் செய்வது , மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது, பின் மாற்றுவது என அனைத்துமே அடங்கும். ஐந்து முறைக்குமேல் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் உண்டு.

பெருநகரங்களில் எப்படி

அதேபோல் உங்களுடையது அல்லாத வேறு வங்கியின் ஏடிஎம்மைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் 3 முறை மட்டுமே இலவசம். மற்ற நகரங்கள் மற்றும் கிராமங்களில் 5 முறை இலவசமாகப் பயன்படுத்தலாம்.

சுமார் 25 ரூபாய் கட்டணம்

நிர்ணயிக்கப்பட்ட இலவச தடவைகளைத் தாண்டி நீங்கள் ஏடிஎம்மைப் பயன்படுத்த வேண்டிய நிலை வந்தால், பணம் எடுப்பதற்கு ஒரு முறைக்கு ₹21 + ஜிஎஸ்டி (18%) கட்டணமாக வசூலிக்கப்படும். மொத்தமாக சுமார் ₹24.78 உங்கள் கணக்கிலிருந்து கழித்துவிடுவார்கள். அதேநேரம் பணம் சாராத சேவைகள் என்றால், உதாரணமாக பேலன்ஸ் செக் செய்வது, மினி ஸ்டேட்மென்ட் போன்ற சேவைகளுக்கு ஒரு முறைக்கு ₹11 + ஜிஎஸ்டி வசூலிப்பார்கள்.

பணம் இல்லை என்றால் எடுக்காதீர்கள்

உங்களுடைய வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லாதபோது, நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சி செய்து அந்தப் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் அதற்கும் வங்கிகள் ₹20 முதல் ₹25 வரை அபராதம் வசூலிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளன. எனவே ஏடிஎம்மில் நுழைந்து கார்டைச் செருகி பேலன்ஸ் பார்த்தாலே அது ஒரு 'முறை'யாகக் கணக்கிடப்படும். எனவே, இலவச வரம்பைத் தாண்டாமல் இருக்க மொபைல் ஆப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பேலன்ஸ் சரிபார்ப்பது புத்திசாலித்தனமாக பார்க்கப்படுகிறது.


காட்டாங்குளத்தூர் சம்பவம்

அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் பணம் எடுக்க ஒரு ஏடிஎம்மில் நின்று கொண்டிருந்தார் நண்பர் ஒருவர். உள்ளே ஒரு நபர்.. 10000 பணம் எடுக்க முயற்சி செய்தார். முதல்முறை முயற்சி செய்தார். அதில் 10000 எடுக்க முடியாது, அதனைவிட குறைவாக எடுக்கலாம் என்று காட்டியது. அவர் 9000 ரூபாய் எடுத்தார். அடுத்ததாக அவரிடம் இருப்பு விவரம் சோதிக்க விருப்பமா என்று கேட்டது. அவரும் ஆம் என்று கொடுத்தார். உடனே அவரிடம் ரகசிய பின் கேட்டது. அவரும் பேலன்ஸ் எவ்வளவு என்று பார்த்தார். அதில் 32000 ரூபாய் இருப்பதாக காட்டியது. அவரும் அவ்வளவு பணம் மீதம் இருக்கிறதே என்று மீண்டும் 10000 என்று டைப் செய்து எடுக்க முயற்சி செய்தார்.

பேலன்ஸ் எப்படி பார்ப்பது

இதை கவனித்த நண்பர்,மேலே உள்ள போர்டையும் கவனித்தார். அதில் 9900 மட்டுமே ஒருமுறை எடுக்க முடியும் என்று ஆங்கிலத்தில் போடப்பட்டிருந்தது. அதன்பிறகு நண்பர், அவரிடம் 10000 என்று போட வேண்டாம். 9900 போட்டு எடுங்கள்.. வரும் என்றார்.. அத்துடன் அவரிடம் இப்படி பேலன்ஸ் இருக்கிறதா என்று பார்க்க வேண்டாம் என்றும், உங்கள் மொபைலில் உள்ள ஆப்பில் பாருங்கள்..அப்படி பார்த்தால் ஒரு பரிவர்த்தனை குறையும் என்று கூறி புரிய வைத்தார். அத்துடன் ஒரே நாளில் 3 முறை பணம் எடுத்தால், அதன்பிறகு இதே வங்கியில் பணம் எடுக்கும் போது உங்களிடம் கட்டணம் வசூலிப்பார்கள் என்பதை பேசி புரிய வைத்தார்.

பலரும் பணத்தை இழப்பார்கள்

அவர் ஒருவரிடம் தான் அப்போது அவரால் சொல்ல முடிந்தது. ஏனெனில் பல சமானிய மக்கள் அதன்பிறகு வந்து 10000 போட்டு சோதித்துவிட்டு, இரண்டு முறை மாற்றி மாற்றி பேலன்ஸ் செக் செய்து பணம் எடுத்து கொண்டு தான் இருந்தார்கள். அந்த ஏஎடிஎம்மில் பணம் எடுத்த பலருக்கும் கட்டணம் போடப்படுவது உறுதியாகி உள்ளது. அந்த ஏடிஎம் தான் கிராமப்புறங்களில் அதிக அளவில் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.. மக்களே கவனமாக இருங்கள்... இல்லாவிட்டால் உங்கள் பணத்தை எடுக்கவே 20 ரூபாய் கட்டணம் செலுத்தும் நிலை வந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+