7 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட தவெக ஜெயிக்கவில்லை.. ஆனாலும் ஆட்சியில் அமரும் விஜய்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்திருந்தாலும், தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஒரு தொகுதியைக் கூடப் பெற முடியாமல் போயிருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, அரியலூர் உள்பட 7 மாவட்டங்களில் அக்கட்சியின் 'விசில்' சின்னம் எடுபடவில்லை. அந்த மாவட்டங்களையும், தொகுதிகளின் விவரங்களையும் பார்ப்போம்.
அரியலூர் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் உள்ளன. அதில் இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறவில்லை. அங்கு அதிமுக இரண்டு தொகுதிளிலும் வென்றுள்ளது. அடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் ஆறு தொகுதிகள் உள்ளன. இதில் ஐந்து தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றுள்ளன. அதிமுக கூட்டணி ஒரு இடங்களில் வென்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 தொகுதிகளில் திமுக கூட்டணி ஒரு இடத்திலும், அதிமுக கூட்டணியில் ஒரு பாஜக ஒரு இடத்திலும் வென்றுள்ளன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 தொகுதிகளில் ஒரு தொகுதிகளில் கூட தவெக வெல்லவில்லை.. அங்கு இரண்டு தொகுதிகளில் திமுக கூட்டணியும் ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணி வென்றுளளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் நான்கில் திமுக வென்றுள்ளது. ஒன்று அதிமுக வென்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் 2 தொகுதிகளில் திமுக கூட்டணியும், 2 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் வென்றுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 3ல் திமுக கூட்டணியும், நான்கில் அதிமுக கூட்டணியும் வென்றுள்ளன.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் காவிரி டெல்டா மாவட்டங்களான அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும், தெற்கே கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் சுத்தமாக தவெக வெற்றி பெறவில்லை.. வட மாவட்டத்தை எடுத்தால் விழுப்புரம் மாவட்டத்திலும் ஒரு இடத்தில் கூட தவெக வெற்றி பெறவில்லை. எனினும் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்றுள்ளதால் கூட்டணி வைத்து ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.
இதில அதிமுக அமமுக கூட்டணி அமைத்து டெல்டாவில் வலுவான செல்வாக்கை அதிமுகவிற்கு தந்துள்ளது. அதேபோல் பாமக உடன் கூட்டணி வைத்து அதிமுக தேர்தலை சந்தித்ததால் வடமாவட்டங்களில் ஓரளவு அதிமுக தப்பி உள்ளது.
அதேபோல் இடதுசாரிகள், விசிக ஆகியவற்றின் பலம் காரணமாக வடமாவட்டங்களில் ஓரளவு இடங்களை திமுக வெல்ல முடிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் விஜய்யின் தவெக சுனாமி போல் வாக்குகளை வாங்கியிருக்கிறது. தவெக மோசமாக எந்த தொகுதியிலும் தோற்கவில்லை.. எந்த தொகுதியிலும் டெபாசிட்டை பறிகொடுக்கவில்லை..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications