எடப்பாடி பழனி’சாமி’ கையில் சாவி! யார்க்கர் போட்டாலும் ‘நோ’ பால்! ரிவ்யூ கேட்கும் ஓபிஎஸ்! பரபர அதிமுக
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து ஓபிஎஸ் நம்பி இருந்த இரு அஸ்திரங்களும் அவருக்கு கை கொடுக்காமல் போயுள்ளது. ஒன்று பொருளாளர் பதவிக்கு தனது கையெழுத்து தான் செல்லும் என்ற கடிதம் வங்கிகளால் ஏற்றுக் கொள்ளப்படாததும் அதிமுக அலுவலகத்தில் சாவியை எடப்பாடி பழனிச்சாமி இடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்ப்பும் அவருக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி கட்சி பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் பொருளாளராக இருந்தவருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அதிமுகவில் மோதல்
தன்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகளை தான் நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்து இரு அறிக்கைகள் வெளியிட்டார். இதேபோல எடப்பாடி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்த பட்டியலை தயாரித்து அவர்களை அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கியது. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில் உண்மையில் எடப்பாடி பழனிச்சாமி கையே அதிமுகவில் தற்போது ஓங்கி இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி
மேலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று ரீதியில் நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி இருக்கிறது. நேற்று அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் சுமார் நான்கரை கோடி ரூபாய் நிதி வேண்டி புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சீனிவாசன் வங்கிகளுக்கு காசோலை அனுப்பினார். இதனை ஏற்றுக் கொண்ட வங்கிகள் தற்போது அதனை பரிசீலனையில் வைத்துள்ளது. ஏற்கனவே பொருளாளர் என்ற வகையில் திண்டுக்கல் சீனிவாசனின் கையொப்பமிருந்தால் அதனை பரிசீலிக்க வேண்டும் என இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி வங்கிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஓபிஎஸ்-க்கு பலத்த அடி
அதே நேரத்தில் அதிமுகவின் பொருளாளராக தானே நீடிப்பதாகவும் எனவே ஓபிஎஸ்-ன் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் ஓபிஎஸ் தரப்பு இந்தியன் வங்கி மற்றும் கரூர் வைசியா வங்கிகளுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளது நேற்று ஓபிஎஸ்-க்கு பலத்த அடியாகப்பட்டது அதிமுகவை பொருத்தவரை சுமார் 350 கோடி ரூபாய் வரை வங்கிகளில் இருப்பு இருக்கிறது அதில் 200 கோடி ரூபாய் அளவுக்கு நிரந்தர டெபாசிட் தொகையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பழனிசாமி கையில் சாவி
இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பட்டு ஓபிஎஸ் தரப்பு தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி தரப்படும் ஒப்படைக்க வேண்டும் என அதிரடியாக உத்தரப்பட்டுள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. தற்போது அதிமுகவில் 99 சதவீத நிர்வாகிகள் எடப்பாடி பின்னால் சென்று நிலையில் அதிமுக அலுவலக சாவியும் அவரை விட்டு சென்றுள்ளது. தற்போது வங்கிகளும் நீதிமன்றமும் ஓபிஸ்க்கு கை கொடுக்காததால், அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறார். இதனால் அவர் பக்கம் இருக்கும் சில நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவி விடலாமா என்று யோசித்து வருகின்றனர்.
Recommended Video

மனு தாக்கல்
இந்த நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு மேல்முறையீட்டுக்கு உகந்தது என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறி இருக்கும் நிலையில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் உயர் நீதிமன்றத்தை போல உச்ச நீதிமன்றமும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சாதகமாக தீர்ப்பளித்தால் அது மேலும் பின்னடைவாக கருதப்படும் என்பதால் சட்ட நிபுணர்களின் முழுமையான ஆலோசனைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக நீண்ட ஆலோசனையில் இருக்கிறார் ஓபிஎஸ்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications