சேகர் பாபு செயல் பாபுவாக வலம் வரும் கதை... காலை 6.30 மணிக்கு தொடங்கும் ஓட்டம் நள்ளிரவு 1 மணி வரை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழும் சேகர்பாபுவின் 58-வது பிறந்தநாளை, கடந்த மூன்று நாட்களாக கொண்டாடி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

திமுக மாவட்டச் செயலாளர் என்பதை கடந்து தங்கள் இல்ல சுக துக்கங்களில் பங்கெடுக்கும் குடும்ப உறுப்பினராக வட சென்னைவாசிகள் சேகர்பாபுவை கருதுகின்றனர்.

மதுசூதனன் மூலம் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த இவர் அதிமுகவிலும் சரி, திமுகவிலும் சரி தலைமையின் நன்மதிப்பை பெற்றவர்.

 மதுசூதனன் மூலம்

மதுசூதனன் மூலம்

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் சென்னை அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த ஜேப்பியாருக்கும், மதுசூதனனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. ஜேப்பியாரை எதிர்த்து அரசியல் செய்த மதுசூதனன் தனக்கென ஒரு ஆதரவாளர்களை வட்டத்தை உருவாக்கி வளர்த்தெடுத்து வந்தார். அந்த ஆதரவாளர்கள் வட்டத்தில் ஒருவராக இருந்தவர் தான் சேகர் பாபு. ஜேப்பியாரின் பணபலத்துக்கு போட்டிபோடும் வகையில் சேகர் பாபு மூலம் ஆள்பலத்தை திரட்டினார் மதுசூதனன்.

ஜெயலலிதா பாராட்டு

ஜெயலலிதா பாராட்டு

அவர் மூலம் கட்சியில் எழும்பூர் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி பதவியை பெற்ற சேகர்பாபு, பின்னர் படிப்படியாக உயர்ந்து ஜெயலலிதாவால் நேரடியாக பெயர் கூறி அழைக்கும் அளவுக்கு தன்னை வளர்த்துக்கொண்டார். வெட்டி வா என்றால் கட்டி வரும் திறமையுடையவர் சேகர்பாபு என்பதால் அதிமுகவில் அவரது கிராஃப் தொடர்ந்து உயர்ந்துகொண்டே சென்றது. ஆர்.கே. நகரில் தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற இவர் மூன்றாவது முறையாகவும் போட்டியிடக் கூடாது என்பதில் அவரது உட்கட்சி எதிர்ப்பாளர்கள் தீவிரமாக இருந்தனர்.

ஜெயலலிதா நடவடிக்கை

ஜெயலலிதா நடவடிக்கை

இதனிடையே சாம்சன் என்பவர் சட்டை கிழிந்த நிலையில் ஜெயலலிதாவிடம் சேகர்பாபுவை பற்றி புகார் கூறியதை அடுத்து, அவரை கட்சியை விட்டு கட்டம் கட்டினார் ஜெயலலிதா. இதனால் நிலைகுலைந்து போன சேகர்பாபு, தன் மீதான புகார் பொய் என்பதை ஜெயலலிதாவுக்கு நிரூபிக்க பல்வேறு வழிகளில் முயன்றார். அதன் பயனாக சாம்சன் அளித்த புகார் பொய்யானது என்பதை அறிந்து சேகர்பாபுவை மீண்டும் அதிமுகவில் இணைத்தார் ஜெயலலிதா.

பழைய செல்வாக்கு

பழைய செல்வாக்கு

இருப்பினும் ஜெயலலிதா நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட்டதைக் கண்டு மனம் நொந்துப்போன சேகர்பாபு கட்சி மாறும் முடிவுக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து அவரை திமுகவுக்கு அழைத்து வந்த ஸ்டாலின், சேகர்பாபுவுக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை அறிந்து கட்சியிலும் மாவட்டச் செயலாளர் பதவியை கொடுத்தார். இதுமட்டுமல்லாமல் சேகர் பாபுவின் சுறுசுறுப்பான செயல்பாடுகள் பற்றி மற்ற மாவட்டச் செயலாளர்களிடம் முன்னுதாரணமாக எடுத்துக்கூறுவார்.

நள்ளிரவு வரை

நள்ளிரவு வரை

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்பது போல் சேகர்பாபுவும் கட்சிப் பணிகள் என வந்துவிட்டால் ஊண் உறக்கமின்றி பம்பரமாக சுழன்று காரியமாற்றக் கூடியவர். நாள்தோறும் காலை 6.30 மணிக்கு தொடங்கும் இவரது ஓட்டம் நள்ளிரவு 1 மணி வரை தொடரும் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். அதேபோல் சேகர்பாவுவை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும் என்பது இவருக்கு இருக்கும் பிளஸ்.

வட சென்னை

வட சென்னை

தனது அலைபேசியில் எத்தனை மிஸ்டு கால்கள் இருந்தாலும் அதனை திரும்ப அழைத்து விவரம் கேட்கக்கூடியவர் சேகர்பாபு. இப்படி அன்பாலும், பாசத்தாலும் வடசென்னையில் தனக்கென பெரிய கூட்டத்தையே வைத்திருக்கிறார் இவர். அடித்தட்டு நிலையில் இருந்து வளர்ச்சி அடைந்தவர் என்பதால் இயல்பாகவே அவர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து அவர்கள் கேட்காமலேயே தேவையறிந்து உதவிகளை செய்து வருகிறார் சேகர்பாபு.

பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

கருணாநிதி பிறந்தநாள், ஸ்டாலின் பிறந்தநாள், என வருடத்தின் பாதி நாட்களை நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவே செலவிடுகிறார். இதனிடையே சேகர்பாபு தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலைக்கு வருடம் தவறாமல் சென்று வரும் இவர் திருவண்ணாமலை, திருத்தணி என தமிழகத்தின் அனைத்து கோயில்களுக்கும் விசிட் அடிக்க தவறமாட்டார். நெற்றியில் குங்குமப்பூ பொட்டு வைத்தப்படி காவி வேட்டியுடன் கருணாநிதியை சந்தித்த ஒரே மாவட்டச் செயலாளர் சேகர்பாபு என்பது கவனிக்கத்தக்கது.

ஓரங்கட்டிய ஸ்டாலின்

ஓரங்கட்டிய ஸ்டாலின்

இதனிடையே சேகர்பாபு மீது திமுகவிலும் புகார் எழாமல் இல்லை. ஆனால் அதனை ஒதுக்கி ஓரங்கட்டி வைத்துவிட்டு சேகர்பாபுவுக்கு எப்போதும் அளிக்கும் முக்கியத்துவத்தை தொடர்ந்து ஸ்டாலின் அளித்து வருகிறார். அதற்கு காரணம் கட்சிப் பணிகளில் சேகர்பாபு காட்டும் ஈடுபாடும், அக்கறையும் தான். இதுமட்டுமல்லாமல் போராட்டமா, ஆர்ப்பாட்டமா அடுத்த 2 மணி நேரத்தில் ஆயிரம் பேரை திரட்டி வரும் திறமை உடையவர் சேகர்பாபு.

இப்படி தொண்டர்களுக்கு அனுக்கமாக நடந்துகொள்வதால் சேகர்பாபுவின் பிறந்தநாளை 3 நாட்களாக கொண்டாடி வருகின்றனர் வட சென்னைவாசிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+