இது என்ன வந்தே பாரத்துக்கு வந்த சோதனை.. இருக்கிற ஸ்பீடையும் குறைக்க முடிவு? அதுவும் இந்த ரூட்டுலயா?
சென்னை: தமிழ்நாட்டில் 4 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இந்த சேவைக்கு இடையில் புதிதாக சேவை தொடங்க உள்ள பல்வேறு ரூட்டுகளில் வேகத்தை குறைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மதுரை - பெங்களூர் இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை தென்னக ரயில்வே மூலம் கொடுக்கப்பட்டு உள்ளது. 10 மணி நேரத்தில் மதுரை டூ பெங்களூர் செல்லும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.

இன்னொரு பக்கம் திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் இதற்காக டிராக்கை சரி செய்ய வேண்டும். குறுகிய வளைவுகளை நீக்க வேண்டும். இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக பணிகள் முடிந்துள்ளன. இதனால் இந்த மாதம் சென்னை - திருநெல்வேலிக்கு 7 மணி நேர ரயில் சேவை தொடங்கப்படும் என்கிறார்கள்.
இது போக சென்னை - விஜயவாடா இடையே புதிய சேவை அக்டோபர் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்படும். இது குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி வழியாக சென்னைக்கு வந்து அதே வழியில் திரும்பும். விஜயவாடா மற்றும் சென்னை இடையே நகரங்களுக்கு இடையேயான ரயிலின் பயண நேரம் கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் ஆகும். வந்தே பாரத் ரயிலால் 20 நிமிடங்கள் பயணம் குறையும். சென்னை டூ திருப்பதிக்கு ரயில் வரப்போவதாக செய்திகள் வந்த நிலையில்தான் இந்த விஜயவாடா ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேகம் குறைப்பு: இந்த நிலையில்தான் இந்த சேவைக்கு இடையில் புதிதாக சேவை தொடங்க உள்ள பல்வேறு ரூட்டுகளில் வேகத்தை குறைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி தற்போது இருக்கும் ரயிலின் வேகத்தை விட குறைவான வேகத்தில் புதிய 9 சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளனர்.
இந்தூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
ஜெய்ப்பூர் - உதய்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
பூரி - ரூர்கேலா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
பாட்னா-ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
ஜெய்ப்பூர்-சண்டிகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
ஆகிய ரூட்களில் வந்தே பாரத் ரயிலில் 70-90 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் 50 வழித்தடங்களை உள்ளடக்கிய 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் இயங்குகின்றன - நான்கு வடக்கு மண்டலத்திலும், மூன்று தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களிலும், இரண்டு மேற்கு, மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு ரயில்வே மண்டலங்களிலும், தென்கிழக்கு மத்தியிலும் தலா ஒன்று, கிழக்கு, கிழக்கு கடற்கரை, தென் மத்திய, தென்கிழக்கு, வடகிழக்கு எல்லைப்பகுதி, கிழக்கு மத்திய, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு இரயில்வே ரூட்களில் இயங்குகின்றன. இந்த நிலையில்தான் மேலே குறிப்பிட்ட 5 சேவைகள் மற்றும் 4 சேவைகளில் வேகத்தை குறைத்து இயக்க முடிவு செய்துள்ளனர்.
படுக்கை வசதி: இதேபோல் இந்தியா முழுக்க பல மாவட்டங்களில், மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கே ரயில்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கியமாக திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் படுக்கை வசதியுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரயில் 4: கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. இதேபோல் கோவை - பெங்களூர் இடையிலும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications