மரணத்திற்கு முன் கண்ணீருடன் பேசிய பிஜிலி ரமேஷ்.. "அந்த யோக்கியதை எனக்கு இல்லை" என உருக்கம்
சென்னை: சமூக வலைதளங்கள் மூலம் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பிஜிலி ரமேஷ், இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு 46 வயது. இந்நிலையில் மரணத்திற்கு முன்பாக பிஜிலி ரமேஷ் உருக்கமாகப் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், யாரும் குடிக்க வேண்டாமென சொல்கிற தகுதி எனக்கில்லை என கண்ணீருடன் பேசியுள்ளார் பிஜிலி ரமேஷ்..
ஒரே ஒரு பேட்டியில் சமூக வலைதளங்களில் அதிக அளவு ரசிகர்களை பெற்றவர் பிஜிலி ரமேஷ். பிளாக் ஷீப் யூட்யூப் சேனலில் ஒரு தொடர் போல் வெளி வந்த ஃபன் பண்றோம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிக அளவு ரசிகர்களை பெற்றார்.

தொடர்ந்து பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் 2019ல் வெளியான இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தில் கவனிக்க வைத்தார். அதனை தொடர்ந்து அமலாபால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆடை, திரைப்படத்திலும் ஜோதிகா முதன்மை காத்திருந்து நடத்திருந்த பொன்மகள் வந்தாள் படத்தில் வெளியே தெரிய ஆரம்பித்தார்.
ஒரே ஒரு பேட்டியில் சமூக வலைதளங்களில் அதிக அளவு ரசிகர்களை பெற்றவர் பிஜிலி ரமேஷ் பிளாக் ஷீப் யூட்யூப் சேனலில் ஒரு தொடர் போல் வெளிவந்த பண்பன்றோம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிக அளவு ரசிகர்களை பெற்றார் தொடர்ந்து பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் 2019ல் வெளியான இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தில் கவனிக்க வைத்தார் அதனை தொடர்ந்து அமலாபால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆடை திரைப்படத்திலும் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த பொன்மகள் வந்தாள் படத்தில் வெளிவந்தார்.
தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருந்த கோமாளி படத்தில் வாட்ச்மேன் வேடத்தில் அவரது நடிப்பு ஓரளவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதற்குப் பிறகு நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா உள்ளிட்ட பல படங்களில் பிஜிலி ரமேஷ் நடித்து வந்தார். இந்த நிலையில் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளில் அவர் விருந்தினராகவும் கலந்து கொண்டார்.
இதன் மூலம் அவருக்கு ஓரளவு வருவாய் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிஜிலி ரமேஷ் அதிகமாக குடித்திருக்கிறார். இதில் கல்லீரல் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது விஜே சித்து உள்ளிட்ட சிலர் அவருக்கு உதவினர். தொடர்ந்து வீடு திரும்பிய ரமேஷுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கால்கள் வயிறு உள்ளிட்டவை வீங்கி நடக்கவும் சாப்பிடவும் கூட முடியாமல் பிஜிலி ரமேஷ் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரது மனைவி பிஜிலி ரமேஷின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் பிஜிலி ரமேஷ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். வீட்டில் இருந்த அவரது உடல்நிலை மிக மோசமானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. உயிரிழந்த பிஜிலி ரமேஷுக்கு ஒரு மனைவியும் படிக்கும் வயதில் ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மரணத்திற்கு முன்பாக பிஜிலி ரமேஷ் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பேசிய பிஜிலி ரமேஷ், எனது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. வண்டி ஓடும் வரை ஓடும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். இந்தக் குதிரை எப்போது நிற்கும் என தெரியாது. ஓடினால் ஓடினது தான்.. நின்றால் நின்றது தான்..
இனிமேல் அதைப்பற்றி பேசி எந்த பிரயோஜனமும் கிடையாது இருக்கும் வரை எனது மனைவியும் குழந்தைகளும் சந்தோஷமாக இருந்தால் சரி தான்.. காலையில் கூட கொஞ்சமாக தான் சாப்பிட முடிந்தது. குடிக்கிறவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எனக்கு யோக்கியதை கிடையாது.. அந்தத் தகுதியை நான் இழந்து விட்டேன்" என பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications