தமிழகத்தை இனி புறக்கணிக்காமல் முன்னுரிமை தர வேண்டும்.. பாஜக-விற்கு தயாநிதி மாறன் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய சென்னை மக்களவை தொகுதியில் அபார வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளரான தயாநிதி மாறன், நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் குரலை திமுக எம்பிக்கள் எதிரொலிப்போம் என கூறியுள்ளார்.

பெரும்பாலான மாநிலங்களில் அசாத்திய வெற்றி பெற்று ஆட்சியை பாரதிய ஜனதா தக்க வைத்தாலும், தமிழகத்தில் அது அமைத்த கூட்டணிக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ளது திமுக கூட்டணி.

The votes of the people of Tamil Nadu will not vain .. echo in parliament .. Dayanidhi Maran

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கிய தயாநிதி மாறன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட 3,01,520 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தமிழகத்தில் திமுக பெற்றுள்ள வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள தயாநிதி மாறன், திமுக-விற்காக மக்கள் அளித்த வாக்குகள் வீணாகாது. நீங்கள் அளித்த வாக்கு நாடாளுமன்றத்தில் அமைதியாக இருக்காது. தமிழக மக்களின் வளர்ச்சிக்காக குரல் கொடுப்போம். தமிழக மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க செய்வோம் என்றார்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்காக 38 எம்பிக்கள் இருந்தும், நம் மாநிலம் புறக்கணிக்கப்பட்டது. தமிழகத்துக்கு பெரும் தீங்கிழைக்கப்பட்டது. ஆனால் இனி அந்த நிலை இருக்காது என உறுதியளிப்பதாக கூறினார்.

தமிழகத்தின் நலனே எங்கள் முதல் கோரிக்கை. மக்கள் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம் தமிழக மக்கள் ஏன் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியை புறக்கணித்தனர் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த 5 வருட ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை அவர்களும் அறிவார்கள். இனி அந்த நிலை தொடர கூடாது. தமிழகத்துக்கு முன்னுரிமை தர வேண்டும். அதுவே எங்களின் கோரிக்கை என வலியுறுத்தினார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+