தங்கையின் கணவருடன் கள்ளக்காதல்.. கடைசியில் விபரீத முடிவெடுத்த பெண்.. அனாதையான குழந்தைகள்!
சென்னை: தங்கையின் கணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம். பெயிண்டராக இருக்கிறார்.
இவரது மனைவி செண்பகவல்லி. இவர்களுக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். செண்பகவல்லியின் தங்கை லாவண்யா. இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தங்கையின் கணவர்
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறது. இதற்கிடையே இரண்டாவது பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்ற லாவண்யாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. ஆனால் லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை இழந்த நிலையில் கைக்குழந்தை மற்றும் 4 வயது குழந்தையுடன் பரிதவித்த ஜோசப், லாவண்யாவின் அக்காள் செண்பகவல்லி வீட்டு மாடியில் தங்கி இருந்துள்ளார்.

கள்ளக்காதல்
அப்போது ஜோசப்புக்கும், செண்பகவல்லிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர ஜோசப்புக்கு அமிர்தா என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடகாலமாக தவறான பழக்கம் இருந்துள்ளது. இதனை செண்பகவல்லி அறிந்ததும் அவருக்கும், ஜோசப்புக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த செண்பகவல்லி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீடியோ வெளியிட்டார்
தற்கொலை செய்வதற்கு முன்பு செண்பகவல்லி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தனது தற்கொலைக்கு காரணம் ஜோசப் என்றும் தன்னை அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாவும் அடித்துத் துன்புறுத்தியதாகவும் செண்பகவல்லி கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவை கணவர் பொன்னுரங்கத்துக்கும் அவர் அனுப்பி இருக்கிறார்.

கைது செய்தனர்
இது குறித்து தகவல் அறிந்த சோமங்கலம் போலீசார் செண்பகவல்லி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செண்பகவல்லியின் கணவர் பொன்னுரங்கம் மனைவியின் உயிரிழப்பு குறித்து சோமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் , தற்கொலை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோசப்பை இன்று கைது செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications