கண்டம் துண்டமான காங்கிரஸ்.. பாய்ந்து அடித்த பாஜக! 2023 சட்டசபைத் தேர்தல்கள் ஒரு ரீவைண்ட்
சென்னை: 2023 ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டு நடைபெற்றத் தேர்தல்கள் என்ன? அதில் வெற்றிபெற்ற கட்சிகள் எவை என்று விரிவாக பார்ப்போம்.
2023 ஆம் ஆண்டு 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பிப்ரவரி 16 ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் ஐபிஎப்டி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது. பாஜகவை சேர்ந்த மானிக் சின்ஹா அம்மாநில முதலமைச்சராக தொடர்கிறார்.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய வட கிழக்கு மாநிலங்களுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் மேலயாவில் எம்.ஜி.ஏ கட்சி தனித்து நின்று தேர்தலை எதிர்கொண்டது. அக்கட்சி வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது. கான்ராட் சங்மா மீண்டும் அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார். நாகாலாந்து மாநிலத்தில் என்.டி.பி.பி கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றிபெற்றன. என்.டி.பி.பி கட்சித் தலைவர் நெஃபியூ ரியோ மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த மே 10 ஆம் தேதி இந்திய அரசியலையே திரும்பி பார்க்க வைத்த கர்நாடக மாநில தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. சித்தராமையா மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம் தென் இந்தியாவில் தன் வசம் இருந்த ஒரு மாநிலத்தையும் பாஜக இழந்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் மாதம் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று இம்மாதம் முடிவுகள் வெளியாகின. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸிடம் இருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்றார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹானை பாஜக தக்க வைக்கவில்லை. அவருக்கு பதிலாக மோகன் யாதவை அக்கட்சி முதலமைச்சராக தேர்வு செய்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் வசம் இருந்த ஆட்சியை பாஜக கைப்பற்றியது. அம்மாநில முதலமைச்சராக விஷ்ணு தேவ் சாய் நியமிக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தில் 2 முறை ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் முதல்முறையாக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. அம்மாநில முதலமைச்சராக ஹேமந்த் ரெட்டி பதவியேற்றார். மிசோரம் மாநிலத்தில் ஆட்சியில் இருந்து மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி ஜொராம் மக்கள் இயக்கம் கட்சி வெற்றிபெற்றது. அம்மாநில முதலமைச்சராக லால்துஹோமா பதவியேற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications