'ஏன் என்கூட பேசுமாட்டுற தாரணி'.. மறைமலைநகரே ஆடிப்போச்சு. வீடு புகுந்து கள்ளக்காதலன் செஞ்ச வேலை
சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் குழந்தையின் கண் எதிரே கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற இளைஞர், போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள நின்னக்கரை ராஜீவ் காந்தி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன் (26). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மல்ரோசபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதாகும் சுதின் உடற்பயிற்சி நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சுந்தர், சுதின் இருவரும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்கள் ஆவர். இதன் காரணமாக சுந்தர் வீட்டுக்கு சுதின் அடிக்கடி வந்து சென்றார்.
இந்நிலையில் சுந்தரின் மனைவி தாரணிக்கும் சுதினுக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது பின்னாளில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இவரும் அடிக்கடி சந்தித்து சந்தோஷமாக இருந்துள்ளனர். இதனிடையே அடிக்கடி சுதின் தனது கள்ளக்காதலி தாரணியை தனிமையில் சந்தித்து வருவதை ஒருகட்டத்தில் சுந்தரேசன் கண்டுபிடித்தார்.
தனது நண்பர் சுதின் தனது மனைவி தாரணி ஆகியோரை அழைத்து சுந்தரேசன் கண்டித்துள்ளார்.ஆனால் சுந்தரசனின் வார்த்தைகளை மீறி இருவரும் தங்கள் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளனர்.
ஆனால் திடீரென சுதினை, அவரது கள்ளக்காதலி தாரணி உதாசீனப்படுத்த தொடங்கியதாக கூறப்படுகிறது. முற்றிலும் தன்னை வேண்டாம் என்று விலகுவதை சுதினால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சுதின் செவ்வாய்கிழமை மதியம் வழக்கம் போல் தனது நண்பர் சுந்தர் வீட்டுக்கு கள்ளக்காதலி தாரணியை பார்ப்பதற்காக போயிருக்கிறார்.
அப்போது சுந்தர் வேலைக்கு சென்றிருந்தார். தாரணி மற்றும் அவரது 2 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது சுதின், கள்ளக்காதலி தாரணியிடம் ஏன் என்னுடன் முன்பு போல் பேசுவது இல்லை. என்னை தவிர்ப்பது ஏன் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு தாரணி சொன்ன பதிலால் ஆத்திரம் அடைந்த சுதின், தாரணியை அவரது 2 வயது மகள் கண் முன்னே கத்தியால் வெட்டியும், அரிவாள்மனையால் கழுத்தை அறுத்தும் கொலை செய்திருக்கிறார்.
இதில் தாரணி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சுதின் அங்கிருந்து நேராக மறைமலைநகர் போலீஸ் ஸ்டேசனில் போய் சரண் அடைந்து அங்கு இருந்த போலீசாரிடம் கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவத்தை தெரிவித்திருக்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தாரணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதினிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த தாரணியின் கணவரிடமும் போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications