அமரன் ஓடிடி ரிலீஸ் தள்ளிப் போகிறதா.. கமலுக்கு பறந்த கோரிக்கை.. நெட்பிளிக்ஸ் எடுக்கும் முக்கிய முடிவு
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான அமரன் படம் நாடு முழுவதும் பாராட்டை பெற்று வருகிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு இருப்பதால், அமரன் படத்தின் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ஜி.வி பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் வணிக ரீதியாகவும் வசூலை குவித்து வருகிறது

அமரன் படம் மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ அதிகாரியின் பயோ பிக்காக எடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றிய முகுந்த், ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளுடனான மோதலின் போது மரணமடைந்தார். இந்தப் படத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அமரனை பாராட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் அமரன் படத்துக்கு எதிராக விமர்சனங்களும், போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்களின் மண் உரிமைப் போராட்டத்தை பற்றிய புரிதல் இல்லாமல், அவர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கண்டனங்களும் வலுத்து வருகின்றன. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பலத்த எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
எதிர்மறை விமர்சனங்களை கடந்தும் அமரன் படம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் இரண்டு வாரங்களில் மட்டுமே அந்தப் படம் இந்தியா முழுவதும் சுமார் ரூ.250 கோடி வசூலை கடந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் அமரன் பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து பல புதிய மைல் கல்லை எட்டும் அமரன், பல பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக சாதனை படைத்து வருகிறது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா உள்பட நாடு முழுவதுமே அமரன் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்புல்லாக சென்றுள்ளது. வார நாட்களில் கூட ஹவுஸ்புல் காட்சிகளால் திரையரங்கங்கள் நிரம்பின. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சூர்யா நடிப்பில் நாளை கங்குவா படம் வெளியாக உள்ள நிலையில், பல திரையரங்குகள் அமரன் படத்தை தக்க வைத்துள்ளன.
பொதுவாக திரைப்படம் வெளியான 28 நாட்களில் அந்தப்படம் ஓடிடியில் வெளியாகும். அமரன் படத்துக்கான ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி இந்த மாத கடைசியில் அமரன் படத்தை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். மறுபக்கம் மக்கள் குடும்பம் குடும்பமாக அமரன் படத்தை பார்க்க திரையரங்கம் வருவதால் அதன் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தயாரிப்பாளர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ரெட் ஜெயின்ட் நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், அமரன் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள். நல்ல கன்டென்ட் இருந்தால் மக்கள் அதை கைவிட மாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமரன் படம் திரையரங்குகளில் நல்ல வசூலை குவித்து வருகிறது. எனவே அதன் ஓடிடி வெளியீட்டை எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உதவ வேண்டும். என்று கூறியுள்ளார். இந்நிலையில் திரையரங்குகளில் உள்ள வரவேற்பை பார்த்து நெட்பிளிக்ஸ் நிறுவனமும் அமரன் டிஜிட்டல் ஒளிபரப்பை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications