கலக்கபோவது யாரு சாம்பியன் பிரபல காமெடியன் வீட்டில் திருட்டு.. சென்னை வடபழனியில் பரபரப்பு
சென்னை: கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் வெற்றியாளரும் நடிகருமான ஜெயச்சந்திரன் வீட்டில் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.
சென்னை வடபழனியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவர் நகைச்சுவை நடிகர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி, சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி ஜங்ஷன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

இவர் கலக்க போவது யாரு போட்டியின் வெற்றியாளரும் கூட! இவர் 15 ஆண்டுகளாக பல்வேறு மேடைகளில் நடித்து வருகிறார். மேடை நாடகங்களை எழுதியுள்ளார். இவர் பல்வேறு மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பயிற்சியும் அளித்துள்ளார்.
இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் கிராமத்தில் ஒரு நாள், அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை பியா பாஜ்பாயுடன் நடித்திருந்தார். அந்த படம் 2014 இல் வெளியானது. லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய படம் அது. அதன் பிறகு ஆத்யன் மற்றும் வெருளி ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஆதவனுடன் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இவரது வீட்டில் நேற்று இரவு 1.5 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயசந்திரன் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications