தேனி மாவட்டம்.. ஆண்டிப்பட்டி டூ கம்பம்.. பவர்ஃபுல் வேட்பாளர்களை களமிறக்கிய அதிமுக
பெரியகுளம் தொகுதி (தனி)- பெரியகுளம் சட்டசபை தொகுதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முத்து மகன் முருகன் என்பவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோசியல் வெல்பர் ஆபீஸராக 28 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர். இவருடைய மனைவி வீரலட்சுமி என்பவர் அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு கீர்த்தி. கனிஷ்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவருடைய சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தாமரைக்குளம் கள்ளிப்பட்டி ஆகும் இந்தப் பகுதியில் விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் கடந்த முறை அதிமுக சார்பில் வேட்பாளராகஅறிமுகம் செய்யப்பட்டு பின்பு அரசு பணி காரணமாக அல்லிநகரத்தைச் சார்ந்த மயில்வேல் என்பவரை மாற்றி அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பம் சட்டமன்ற தொகுதி- எஸ்.பி.எம்.சையதுகான்- இவர் 1973-ஆம் ஆண்டு உத்தமபாளையம் பேரூராட்சி அதிமுக அமைப்பாளராகவும் 1975 பெரியகுளம் நாடாளுமன்ற எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும் 1980 உத்தமபாளையம் ஒன்றிய கழகச் செயலாளராகவும், புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும், 1997 முதல் 2007 ஆம் ஆண்டு வரை தேனி மாவட்ட கழகச் செயலாளராகவும், 2001ஆம் ஆண்டு ஆட்சிமன்ற குழு உறுப்பினராகவும் 2002ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டார் தற்பொழுது அதிமுக தேனி மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார் .
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி- ஆ.லோகிராஜன்- இவரது தந்தை பெயர் ஆங்க தேவர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கானாவிலக்கு அருகிலுள்ள முத்தனம் பட்டியைச் சேர்ந்த இவர் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராகவும் தற்போது ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகம் தேனி மாவட்ட இந்து அறங்காவலர் குழு தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இப்படி நல்ல அனுபவம் உள்ள, கட்சி பின்புலம் உள்ளவர்களை களமிறக்கியுள்ளது அதிமுக.
-
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்?












Click it and Unblock the Notifications