சம்பள உயர்வு கேட்டவ துப்புரவு பணியாளர்களை குறி வைத்து மிரட்டல்? தேனி மருத்துவ கல்லூரியில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊதிய உயர்வு மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டுப் துப்புரவுப் பணியாளர்களை குறி வைத்து வேலையை விட்டு நீக்க சிலர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் கானா விலக்கு பகுதியில் அமைந்துள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்களைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கும் சுமித் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Theni Medical College Sanitation Workers Allege Job Termination Threats After Demanding Better Pay

ஊதிய உயர்வு மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டுப் போராடியவர்களையும் குறி வைத்து நிறுவனத்தின் மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் வேலையை விட்டு நீக்குவதாக மிரட்டி வருவதாகப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
​
நாங்கள் சம்பள உயர்வு கேட்டு முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை வைத்து, அதன் பின்னர்தான் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான முறையில் சம்பள உயர்வைப் பெற்றோம்.

ஆனால், அதைக் தாங்கிக்கொள்ள முடியாத மண்டல மேலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் சேர்மன் சதீஷ் உள்ளிட்டோர் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.

போராட்டத்தில் முன்னின்று குரல் கொடுத்த 10 பேரை மட்டும் குறிவைத்து, அவசரகதியில் பணியை விட்டு நீக்கப் பார்ப்பதாகவும், இதைக் தட்டிக் கேட்டால் நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள் என்று நிர்வாகம் மிரட்டுவதாகவும் பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், புதிய ஆட்களை வைத்துக்கொண்டு பழைய பணியாளர்களை அச்சுறுத்தி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். நாங்கள் கொரோனா காலத்தில்கூட உயிரைப் பணையம் வைத்து வேலை பார்த்தோம். இப்போது எங்களுடைய நியாயமான உரிமைகளைக் கேட்டதற்காகப் பழிவாங்குகிறார்கள்.
​
15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஏழைத் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சுமித் நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கண்ணீர் கோரிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+