நீ சாகவேண்டாம்.. நானே சாகடிக்கிறேன்... திருமணமான 6 மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்
Recommended Video

சென்னை தாம்பரத்தில் திருமணமான 6 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், கணவனே அந்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடியது அம்பலமாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சுந்தரபாண்டிய புரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் மாரியப்பன் தனது சொந்த ஊரான தென்காசியைச் சேர்ந்த விக்னேஷ்வரியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

சகோதரி வீட்டில் குடியேற்றம்
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் காந்தி நகரில் தனது சகோதரியின் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் மாரியப்பன் குடியேறினார்.

வரதட்சனை
இதற்கிடையில் திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே மனைவி விக்னேஷ்வரியிடம் உறவினர்கள் யாருடனும் பேசக்கூடாது என கண்டித்தாராம். இதேபோல் அடிக்கடி பணம், நகை கொண்டுவா என வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாராம்.

தற்கொலை
இந்நிலையில் மனஉளைச்சலில் இருந்த விக்னேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு உடலை அனுப்பி வைத்த போலீசார் மாரியப்பனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முண்ணுக்கு பின் முரணாக பேசியதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கழுத்து நெறித்து கொலை
சம்பவம் நடந்த செவ்வாய்கிழமை இரவு மனைவி விக்னேஷ்வரி மற்றும் கணவன் மாரியப்பன் இடையே வரதட்சணை விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மாரியப்பன், மனைவி விக்னேஷ்வரியை கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் இரவு பணிக்கு சென்றுவிட்ட மாரியப்பன் மறுநாள் புதன்கிழமை காலை, தனது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறியது தெரியவந்துள்ளது.

சிறையில் அடைப்பு
மேலும் செவ்வாய்கிழமை இரவு நடந்த தகராறில் மனைவி சாகப்போவதாக கூறியதை கேட்டு, நானே உன்னை சாகடித்துவிடுகிறேன் என்று கூறி மனைவியை மாரியப்பன் கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த சேலையூர் போலீசார், மாரியப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications