வடநாட்டில் தயாநிதி வீடியோ வைரல்..’இந்தியா’வுக்குள் ‘இந்தி’ போர்.. திமுக நிலை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கூட்டத்திற்கு 'இந்தி' மொழி சர்ச்சையைப் பற்ற வைத்துவிட்டார் டி.ஆர். பாலு என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.

அதை வைத்து 'இந்தியா' கூட்டணிக்குள் ஒரு விரிசலை ஏற்படுத்த அண்ணா மலை முயற்சி செய்து வருகிறார் என்று திமுக தரப்பு ஒரு விளக்கத்தை வைத்து வருகிறது.

There is a difference of opinion about the Hindi language within the India alliance

ஆனால், டெல்லியில் நடத்த 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் என்ன பேசினார் நிதிஷ்குமார் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. அவர், 'இந்தி தேசிய மொழி ஆகவே அதைக் கற்றுக் கொள்ளுங்கள்' என்று சொன்னதாகச் சொல்லப்படுகிறது.

அதற்குத் தயாநிதி மாறன் பேசிய வீடியோ ஒன்றை பாஜகவினர் பரவலாக சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். அந்த வீடியோ அப்படியே வடமாநிலம் வரை சென்று சேர்ந்திருக்கிறது.

There is a difference of opinion about the Hindi language within the India alliance

மேற்கு வங்க பாஜக 'தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த அமித் மாளவியா, "திமுகவின் எம்.பி. தயாநிதி மாறன் இந்தி படித்தவர்கள் தமிழ்நாட்டில் கழிவறைகளைச் சுத்தம் செய்வதாகப் பேசி இருக்கிறார். இது குறித்து இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ராகுல்காந்தியும் நிதிஷ்குமாரும் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கூறி இருக்கிறார்.

அதற்கு பேக்ட் செக்கர் முகமது சுபைர் என்பவர் பின்னூட்டமாக ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார். 9 மாதங்களுக்கு முன்பு பேசிய பழைய வீடியோவை ஏன் இப்போது பயன்படுத்தி உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

There is a difference of opinion about the Hindi language within the India alliance

அந்த வீடியோவை ரீ ட்வீட் செய்த அண்ணாமலை, 'உபி மற்றும் பீகார் மக்களை திமுக எம்பி அவதூறாகப் பேசிய இந்த வீடியோவுக்கு திமுகவிடம் இருந்து கிடைத்துள்ள ஒரே பதில், இது பழைய வீடியோ என்பது மட்டும்தான்.

பிரிவினைவாத கொள்கையைக் கொண்ட திமுக இன்றும் இதே மொழியைத்தான் பயன்படுத்துகிறது. சமீபத்தில் திமுக எம்.பி. ஒருவர் வடமாநில இந்தி பேசும் மக்களை கோ மூத்திரம் குடிப்பவர்கள் எனப் பேசி இருந்தார். திமுக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்கள் இன்று இதே மொழியைப் பயன்படுத்தி வருகிறார்கள்' எனக் கூறி இருக்கிறார்.

There is a difference of opinion about the Hindi language within the India alliance

உண்மையில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து டிஆர் பாலுவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது 'நாங்கள் இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை விரும்புகிறோம்' என்று சொல்லிவிட்டுக் கடந்து போய்விட்டார்.

ஆக, என்ன நடந்தது என்பது குறித்து ரகசியம் காத்து வருகிறது திமுக. ஆகவே இது குறித்து எழுத்தாளர் அருணன் விளக்கம் என்ன? என்று கேட்டோம். அவர், "அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது? உங்களுக்குத் தகவல் தெரியுமா? எனக்குத் தெரியாது. அங்கு என்ன நடந்தது என்பதை அதிகாரப்பூர்வமாகச் சொன்னார்களா? இல்லை.

There is a difference of opinion about the Hindi language within the India alliance

இதுவரை தகவல் இல்லை. பொதுவாக இந்த மாதிரியான கூட்டத்தில் நிதீஷ் குமார் போன்றவர்கள் ஹிந்தியில் பேசுவார்கள். அதை ஆங்கிலத்தில் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் மொழிபெயர்ப்பார்கள். ஆனால், இந்த முறை நடக்கவில்லை.

மொழிபெயர்க்கப்படவில்லை என்று தெரிந்த பிறகு, டி.ஆர்.பாலு பேசுவதை மொழிபெயர்க்க வேண்டுகிறார். அப்படிக் கேட்டபோது நிதிஷ்குமார், 'இந்தி தேசிய மொழிதானே நீங்கள் அதைக் கற்றுக்கொள்ளுங்கள்' என்று சொன்னார் என்று ஆங்கில பத்திரிகையில் வந்த செய்தியைக் கண்டு தெரிந்துகொண்டேன். அந்தச் செய்தியைக் கூட உறுதியாக அவர்கள் எழுதவில்லை. நடந்ததாகத் தெரிகிறது என்றே சொல்லி எழுதி இருந்தார்கள்.

There is a difference of opinion about the Hindi language within the India alliance

அதன்பிறகு என்ன நடந்தது? பொதுவாக இந்தியில் பேசுபவர்கள், அதற்குமேல் ஆங்கிலத்தில் பேசினார்கள். இப்படித்தான் அந்த ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டிருந்தது.

மீண்டும் குறிப்பிட்டுச் சொல்ல நான் விரும்புவது என்னவென்றால், அங்கு என்ன நடந்தது என்பது அதிகாரப்பூர்வமாக நமக்குச் சொல்லப்படவில்லை.

There is a difference of opinion about the Hindi language within the India alliance

அப்படி ஒருவேளை நிதிஷ்குமார் அவ்வாறு கூறியிருந்தால், அவர் கருத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், இந்தி தேசிய மொழி இல்லை. அது ஒன்றிய அரசின் அலுவல் மொழி மட்டும்தான். அப்படித்தான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதையடுத்து 8வது அட்டவணையில் இந்தி உள்ளிட்ட 22 மொழிகள் பட்டியல் இடப்பட்டுள்ளன.

ஏன் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மட்டும் இருக்க வேண்டும்? 22 மொழிகளும் அலுவல் மொழிகளாக இருக்கக் கூடாது என்று நாம் இன்றைக்குக் கேள்வி எழுப்புகிறோம். ஐரோப்பாவில் 24 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன.

There is a difference of opinion about the Hindi language within the India alliance

ஆகவே, இதைவைத்து 'இந்தியா' கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. அது நடக்காது" என்கிறார்.

"இந்தி விசயத்தில் திமுக சமரசத்திற்கு வந்துவிட்டது என்பதை நான் ஏற்கமாட்டேன். ஆனால், இந்தியா கூட்டணி சார்பான சர்ச்சைக்கு திமுக ஒரு விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டிருக்கலாம். அவர்கள் அதைத் தவிர்த்து இருக்க வேண்டாம் என்பது என் கருத்து.

திமுக இந்தி விசயத்தில் சமரசமாகிவிட்டது என்று எப்போது முடிவெடுக்கலாம் என்றால், இந்தியா கூட்டணி தொடர்பான தேர்தல் அறிக்கையில் இந்தி சார்ந்து ஏதாவது ஒரு விசயம் இடம்பெற்று அதை திமுக எதிர்க்காமலிருந்தால் அப்போது வேண்டுமானால் அந்த முடிவுக்கு நாம் வரலாம்" என்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+