ஹெல்த் இன்சூரன்ஸ் தெரியும்! அதென்ன திருமண இன்சூரன்ஸ் பாலிசி? எதற்காக எடுக்க வேண்டும்?
சென்னை: ஆடம்பரமாக திருமணம் செய்ய விரும்புபவர்களா நீங்கள்? அப்படியென்றால் திருமண இன்சூரன்ஸ் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். எந்தெந்த நிறுவனங்கள் திருமண இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
திருமணங்கள் என்பது தற்போது ஆடம்பரமாகிவிட்டது. இப்படி செய்தால்தான் கவுரவம் என பலர் நினைக்கிறார்கள். இதனால் இல்லாத பட்டவர்கள் கூட தங்கள் சக்தியை மீறி கடன் உடனையாவது வாங்கி திருமணம் நடத்தும் நிலை உள்ளது.

அந்த காலத்தில் திருமணம் என்றால் ஒரு டிரங்க் பெட்டி, பாய், தலையணை, ஜமக்காளம், பாத்திரம் பண்டங்களை கொடுப்பார்கள். ஆனால் இன்று தங்கம், வெள்ளி, கார், பைக், டிவி, வாஷிங் மெஷின், ஏ டூ இசட் பாத்திரங்கள் என வரதட்சிணையாக பெறப்படுகிறது.
தங்க நகைகள் மட்டுமல்லாமல் உடைகள் கூட வாங்கிக் கொடுக்கும் நிலை உள்ளது. இது எல்லாவற்றுக்கும் மேல் பெண்ணும் மாப்பிள்ளை ஹனிமூன் செல்லக் கூட பெண் வீட்டார் செலவு செய்யும் நிலை உள்ளது. அதிலும் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு எல்லாம் வேண்டாமாம் . தாய்லாந்து, பாங்காங், அயர்லாந்து, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குத்தான் செல்ல வேண்டும் என்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் திருமணக் காப்பீடு என்பது முக்கியமானதாகும். திருமண ரத்து, விபத்து, இயற்கைச் சீற்றம் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் பாதிக்கப்படும் போது இழப்புகளை ஈடு செய்ய இந்த காப்பீடு திட்டம் உதவுகிறது. இதன் மூலம் ஹோட்டல் முன்பதிவு, போக்குவரத்து போன்ற செலவுகளையும் உள்ளடக்கும்.
திருமணங்கள் மூலம் சமூகம் கட்டமைப்படுகிறது. அப்படிப்பட்ட திருமணத்திற்கு ஆடம்பர செலவு செய்து வருகிறார்கள். திருமணத்திற்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் ரூ 4.25 லட்சம் கோடி செலவு செய்யப்படுவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. திருமண விழாக்களுக்கான செலவுகளின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட ஆடம்பரத்தில் பாதுகாப்புமின்மைகள் உள்ளன. திருமணம் ரத்து, திருமண இடத்தில் விபத்து, அல்லது திருமணத்தை பாதிக்கும் இயற்கை சீற்றங்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏதேனும் காரணத்திற்காக திருமணம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது தேதி மாற்றப்பட்டாலோ சமையல் கலைஞர்கள், பிறருக்கு செலுத்தப்படும் பணம் உள்ளிட்ட ஹோட்டல் மற்றும் போக்குவரத்து முன்பதிவுகளும் இதில் அடங்கும்.
இந்த இழப்பை காப்பீட்டு நிறுவனம் செலுத்தும் அல்லசு ஈடு செய்யும். சாலையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் இதுவும் உதவும். பிறவி நோய், கடத்தல் அல்லது தற்கொலை போன்ற காரணங்களால் மரணம் ஏற்பட்டாலும் இந்தக் காப்பீடு செல்லாது. மேலும் தீவிரவாத தாக்குதல் அல்லது இயற்கைக்கு மாறான காயம் ஏற்பட்டால் இந்தக் கொள்கை செல்லாது. பஜாஜ், ஐசிஐசிஐ, நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் ஓரியன்டல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகியவை திருமண இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகிறது. எனவே ஆடம்பரமாக திருமண செலவுகள் செய்வோர் இந்த பாலிசிகளை எடுத்துக் கொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications