அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்கிறதா? விஜய்யோட பிளானே இதுதான்.. போட்டு உடைத்த பிரசாந்த் கிஷோர்
சென்னை: வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக+விஜய்யின் தவெக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேச்சு எழும் நிலையில், விஜய் தனித்து களம் இறங்குவார் என்றும், அவரால் தனித்தே வெற்றியை பெற முடியும் எனவும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2026 ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் எனத்தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சற்றேறக்குறைய ஓராண்டு மட்டுமே இருப்பதால் அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் இந்த முறை எத்தனை முனை போட்டி இருக்கும் என்றே கணிக்க முடியாத நிலை உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
திமுக கூட்டணிகள் ஒரு பக்கம் வலுவாக உள்ளன. பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கும் தூது விடுவதாக சொல்லப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வரும் 2026 ஆம் தேர்தலில் அதிமுக வெற்றிக் கூட்டணியை அமைக்கும் என்று சொல்லி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், வரும் 2026 தேர்தலில் களம் காண ஆயத்தமாகி வருகிறார்.
நிர்வாகிகள், நியமனம், பூத் லெவல் ஏஜெண்ட்களை நியமிக்கும் பணி என தவெக தேர்தல் பணிகளை மெல்ல மெல்ல முன்னெடுத்து வருகிறது. மற்றொரு பக்கம் பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் நீடிக்கும், எந்தெந்த கட்சிகள் தொடரும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. சீமான் வழக்கம் போல தனித்தே போட்டி என்று பேசி வருகிறார்.
அதிமுகவுடன் தவெக கூட்டணி
தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் அது, திமுக கூட்டணிக்கே சாதகமாக இருக்கும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இதனால், அதிமுகவும் தவெகவும் கூட்டணி அமைத்து போட்டியிடக்கூடும் என்று கூட ஒரு பேச்சு அரசியல் வட்டாரத்தில் உலா வந்தது. தவெக விஜய்யும் கட்சியின் முதல் மாநாடு தொடங்கி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற 2-வது ஆண்டு விழாவில் கூட, திமுகவையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
விஜய் தனித்து போட்டி
ஆனால், அதிமுக பற்றி இதுநாள் வரையில் அவர் வாய் திறக்கவில்லை. அதிமுகவை பற்றியோ எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பற்றியோ விஜய் எதுவும் விமர்சிக்காததை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள் ஏதோ ஒரு அரசியல் கணக்கிற்காகத்தான் விஜய் இப்படி காய் நகர்த்துவதாக சொல்கிறார்கள். ஆனால், அதிமுகவோடு விஜய் கூட்டணி வைக்க மாட்டார் எனவும் தனித்தே போட்டியிட இருப்பதாகவும் பிரபல அரசியல் வியூக நிபுணரும் பீகாரின் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் பேச்சு
தந்தி டிவிக்கு அளித்து இருக்க கூடிய பேட்டியில் இந்த தகவலை பிரசாந்த் கூறியிருக்கிறார். தனித்தே போட்டியிட விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த முடிவில் மாற மாட்டார் என நினைக்கிறேன் என்று கூறியுள்ள பிரசாந்த் கிஷோர் தனித்து போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. நான் சொல்வதை தேர்தலுக்கு பிறகும் போட்டு பாருங்கள் தெரியும் என்று கூறியுள்ளார். மேலும், பீகாரில் தனக்கு உதவுவதாக விஜய் சொல்லியிருப்பதாகவும் அவருக்கு பீகாரில் அதிக ரசிகர்கள் உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
தவெக நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, நாங்கள் 40 சீட் என்பதற்காகவா வந்திருக்கிறோம். ஆட்சியை அமைக்க வந்திருக்கிறோம் என்று பேசியிருந்தது கவனிக்கத்தக்கது. தனித்து போட்டியிடவே விஜய் தற்போது திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை எனவும் தேர்தலுக்கு முன்பாக எனன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்ததுதான் பார்க்க வேண்டும் என கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications