தங்கம் விலை ஏற்றமும் இல்லை இறக்கமும் இல்லை! நாளைக்கு வச்சு செய்யுமோ? சென்னையில் ஒரு பவுன் என்ன விலை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சவரன் ரூ ரூ 53,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 2ஆவது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

சென்னையில் ஞாயிறு, திங்கள்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்று (ஆகஸ்ட் 26) சவரன் ரூ 53,560 க்கும், கிராம் ரூ 6695க்கும் விற்பனை செய்யப்பட்டது. அது போல் இன்றைய தினமும் (ஆகஸ்ட் 27) தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே தொடர்கிறது.

gold rate gold chennai


இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை எட்டியது. இதனால் நடுத்தர ஏழை மக்களால் ஒரு குண்டுமணி பவுன் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இதனால் அன்றே தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 2,200 ஆக குறைந்தது. அதைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு சரிந்து கொண்டே வந்த தங்கம் திடீரென 160 ரூபாய் உயர்ந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த நாளே ரூ 160 குறைந்தது. இப்படியாக சீசா விளையாடிக் கொண்டிருந்த தங்கம் விலை கடந்த மாதம் இறுதி வரை முழம் ஏறுவது, ஜான் சறுக்குவதுமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ரூ 51,680க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6460-க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 91 க்கு விற்பனையானது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ 51,600க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து கிராம் ஒன்று ரூ. 6450 - க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ 90க்கும் ஒரு கிலோ ரூ 90 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி மார்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 20 உயர்ந்து கிராம் ரூ 6470க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரன் தங்கம் 51,760 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ 560 குறைந்து ஒரு சவரன் தங்கம் 51, 200 க்கு விற்பனையானது. அது போல் ஒரு கிராம் ரூ 6400 க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ரூ 4 குறைந்து ஒரு கிராம் ரூ 87 க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 87 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி கிராமுக்கு ரூ 70 குறைந்து பவுனுக்கு ரூ 560 மேலும் சரிந்து ஒரு கிராம் ரூ 6,330 க்கும் ஒரு சவரன் ரூ 50,640-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 87 க்கு விற்பனையானது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ 6350 க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு பவுன் ரூ 50,800க்கு விற்பனையானது.

அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 86.50 க்கும் ஒரு கிலோ ரூ 86,500-க்கும் விற்பனையானது. சென்னையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 600 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 51,400 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 75 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,425 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ரூ 1.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ 88 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

சென்னையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 51,560 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 20 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,445 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 88 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88 ஆயிரத்திற்கும் விற்பனையானது. சென்னையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்தது.

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 51,760-க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 20 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,465 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ 87.50 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 87500-க்கும் விற்பனையானது. சென்னையில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 760 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 52,520 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 95 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,565 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 88.50 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88500-க்கும் விற்பனையானது.

சென்னையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 52,440 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 10 வீதம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,555 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ 88- க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88000-க்கும் விற்பனையானது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சந்தைகளுக்கு விடுமுறை என்பதால் அன்றைய தினம் தங்கத்தின் மீது எந்த மாற்றமும் இல்லை. இந்த நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 10 வீதம் உயர்ந்து ரூ 6565க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு ரூ 80 உயர்ந்து சவரன் ரூ 52,520 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளி விலை ஒரு கிராம் 89 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ 89 ஆயிரத்திற்கு விற்பனையானது.

சென்னையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி அன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 840 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,360 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 105 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,670 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ரூ 2 உயர்ந்து உயர்ந்து ஒரு கிராம் ரூ 91- க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 91000-க்கும் விற்பனையானது.

இதையடுத்து ஆகஸ்ட் 18ஆம் தேதி மார்க்கெட் விடுமுறை என்பதால் அன்று எந்த மாற்றமும் இல்லாமல் தங்கம் விலை இருந்தது. ஆகஸ்ட் 19 ஆம் தேதியும் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் 53,360 க்கு விற்பனையானது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,280 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 10 வீதம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,660 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ 92- க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 92000-க்கும் விற்பனையானது.

சென்னையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,680 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 50 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,710 க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 92- க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 92000-க்கும் விற்பனையானது.

gold rate gold chennai

சென்னையில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 குறைந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,440 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 60 வீதம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,680 க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 92- க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 92000-க்கும் விற்பனையானது.

சென்னையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 140 குறைந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,280 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 17.50 வீதம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,660 க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.91.70 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 91700-க்கும் விற்பனையானது.

சென்னையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 280 உயர்ந்து ஒரு சவரன் ரூ 53,560 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 35 உயர்ந்து ரூ 6,695 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது போல் ஆகஸ்ட் 26ஆம் தேதி கோகுலாஷ்டமியை முன்னிட்டு விடுமுறை என்பதாலும் ஆகஸ்ட் 27ஆம் தேதி எந்த மாற்றமும் இல்லாமல் பழைய விலைக்கே தங்கம் விற்பனையானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+