சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை.. 23 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை!
சென்னை: சென்னையில் இன்றைய தினம் பெட்ரோலி விலை லிட்டருக்கு 102.49 ரூபாயாகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ 94.39 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. நாடு முழுவதும் வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து மே மாதம் வரை பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது அதன் விலையை மாற்றி வருகின்றன.

டீசல் விலை
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 102.49 ரூபாய், டீசல் லிட்டர் ரூ 94.39 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து 23 ஆவது முறையாக இன்றைய தினம் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

முழு ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கால் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற வாகன ஓட்டிகள் வீட்டுக்குள்ளேயே கிடந்தனர். மேலும் தினந்தோறும் அலுவலகத்தில் வேலை பார்த்தவர்களுக்கு வீட்டில் வேலை பார்க்கும் வசதி இருந்தால் அவர்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

எரிபொருள் பயன்பாடு
இதனால் வாகன நடமாட்டம் இல்லாமல் குறைந்ததால் இந்தியாவின் எரிபொருள் தேவையானது நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய் அளவுக்கு குறைந்தது. கடந்த மார்ச் மாதம் பெட்ரோல் பயன்பாடு, கொரோனாவுக்கு முன்பு இருந்த இயல்புநிலையை நெருங்கியது. இருந்தாலும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதம் மீண்டும் எரிபொருள் பயன்பாடு குறைந்தது.

ஜூலை மாதம்
ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ஜூன் மாதம் எரிபொருள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் பயன்பாடு மேலும் அதிகரித்தது. மொத்தம் 23.70 லட்சம் டன் பெட்ரோல் உபயோகிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் அதிகம்.

ஜூலை மாதம்
கொரோனாவுக்கு முன்பு அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23.90 லட்சம் டன் பெட்ரோல் விற்பனை ஆகியிருந்தது. அதே நிலையை தற்போது எட்டியுள்ளது. கடந்த மாதம் 54.59 லட்சம் டன் டீசல் விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.36 சதவீதம் அதிகம்.
-
“ரூ.10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டியிருக்கும்..” பெட்ரோல் விலை குறித்து வாயை விட்ட நிர்மலா சீதாராமன் -
கன்னாபின்னாவென உயர்வு.. பெட்ரோல் விலை அதிகமென சிஎன்ஜி கார் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! -
பூமிக்கு அடியில் ஒளிந்திருக்கும் பொக்கிஷம்.. இந்தியாவை மாற்றப்போகும்.. மோடியின் மெகா திட்டம் -
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
திணறும் மத்திய அரசு! 1 மணிநேரத்திற்கு ரூ.25 கோடி இழப்பு.. பெட்ரோல், டீசல் விலையை 4 முறை உயர்த்தியும் இப்படி! -
பட்ஜெட்டில் துண்டு போடும் பெட்ரோல் விலை.. இந்தியாவிலேயே உச்சம் எங்கு தெரியுமா? சென்னைக்கு எந்த இடம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications