உதவியாளருக்கு அவசர சிகிச்சை.. அரசு மருத்துவமனை வந்த ராதாகிருஷ்ணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், காயமடைந்த தனது உதவியாளரை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனை சென்ற நிலையில், அங்கு ஒரு மருத்துவர் கூட அப்போது இல்லையாம்.. இதனால் ராதாகிருஷ்ணனின் உதவியாளர் அருகில் இருந்த தனியார் மருத்துவனையில் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
சென்னையில் இருந்து பலரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மற்றும் பல நிறுவனங்கள் இன்று முதல் வரும் திங்கள் வரை விடுமுறை அறிவித்துள்ளன. பொதுவாக இது போன்ற விடுமுறை நாட்களில் சிறிய அரசு மருத்துவனைகளில் குறைந்த அளவு செவிலியர்கள் மட்டும் தான் இருப்பார்கள், பிரசவம், விபத்து உள்ளிட்ட சில அவசர சிகிச்சைக்காக மட்டும் ஒரு டாக்டர் இருப்பார். இதுதான் நடைமுறை..

இந்நிலையில் சென்னை கண்ணகி நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சிறிய அரசு மருத்துவமனையில் நேற்று ஒரு டாக்டர் கூட இல்லை. மாநகராட்சி ஆணையரே அவசரத்துக்கு சென்று பார்த்தால் இதுதான் நிலை என்கிறார்கள். தனது உதவியாளருக்கு அவசர சிகிச்சை செய்ய அரசு மருத்துவமனை வந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் இந்த நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து இறங்குவதற்காக அவரது உதவியாளர் ராமன் கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் அதனை அறியாத ராதாகிருஷ்ணன் தானே கதவை திறக்க முயன்றுள்ளார்..
இதனால் கதவை திறந்த உடன் உதவியாளர் ராமன் கிழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தனது காரிலேயே ராமனை அமர வைத்து, அருகில் இருந்த மாநகராட்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சிறிது நேரத்திலேயே,, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் தனது உதவியாளர் ராமனை சேர்த்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்கு அழைத்த செல்ல 108 ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸில் சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ராமன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications