Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரோ தலைவர் சிவன் அழுததில் என்ன தப்பு? குஷ்பு கேள்வி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கண்ணீர் மல்கிய சிவன்.. வாரி அணைத்து, தட்டி கொடுத்து மோடி ஆறுதல்

    சென்னை: இஸ்ரோ தலைவர் சிவன் அழுததில் எந்த தவறும் கிடையாது, என்று தெரிவித்துள்ளார், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் நடிகையான குஷ்பு.

    சந்திரயான் 2 விண்கலம், நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய விக்ரம் என்ற லேண்டர், நிலவின் மேற்பரப்பை தொடுவதற்கு சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்த போது விஞ்ஞானிகள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    There is nothing wrong with ISRO leader Shivans cry, says Kushboo sundar

    இதனால் விஞ்ஞானிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்தநிலையில் இன்று காலை 8 மணியளவில் இஸ்ரோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் உரையாற்றினார்.

    இதையடுத்து பிரதமர் மோடி வெளியே சென்ற போது அவரை வழி அனுப்புவதற்காக, இஸ்ரோ தலைவர், சிவன், அங்கு வந்தார். அப்போது வருத்தத்தோடு இருந்த சிவனை தனது தோளில் சாய்த்துக்கொண்டு முதுகை தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினார் நரேந்திர மோடி. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

    இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த கௌரவ் பந்தி என்பவர், தோல்விகள் வெற்றிக்கான படிக்கட்டுகள். மொத்த உலகமும் இஸ்ரோ சாதனையை பாராட்டி வருகிறது. எனவே சிவன் போன்ற ஒரு உயர் பதவியில் இருப்பவர், இவ்வாறு அழுதிருக்க தேவையில்லை என்று கருத்து தெரிவித்தார்.

    இதை ரீட்வீட் செய்துள்ளார் குஷ்பு. அதில் அவர் கூறுகையில், நான் இதை மறுக்கிறேன். இந்த உணர்ச்சி என்பது புரிந்து கொள்ளக்கூடியது. குழந்தையை இழப்பது போன்ற ஒரு உணர்ச்சி அது. சந்திரயான் விண்கலத்தை ஒவ்வொரு பாகமாக உருவாக்கியவர்கள் அவர்கள். எனவே அது மாயமானதும் அழுகை வருவது மனித இயல்பு. இதில் இஸ்ரோ தலைவர் சிவன் மட்டும் விதிவிலக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் சில நெட்டிசன்கள் சிவன் அழவில்லை. வருத்தத்துடன்தான் இருந்தார் அவ்வளவுதான். மோடி அவரை அணைத்து ஆறுதல் கூறினார். சில ஊடகங்கள் அவர் கதறி அழுது விட்டதாக கூறி மிகைப்படுத்தின. அவர் கண்ணீர் மல்க நின்றது மட்டுமே உண்மை என்று கூறியுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+