திருப்பதி திருக்குடை ஊர்வலம்.. சென்னையில் இந்த பக்கமெல்லாம் போகாதீங்க.. டேக் டைவர்ஷன்தான்
சென்னை: சென்னையில் இன்று திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெறவுள்ளதால் பல இடங்களில் இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறையின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: காலை 8 மணி முதல் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி.போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.

மதியம் 3 மணி முதல் ஊர்வலம் பேசின் பிரிட்ஜை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. எனவே, வாகன ஓட்டிகள் பேசின் பால சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தி கொள்ளலாம். ஈ.வெ.ரா.சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.
ஊர்வலம் மூலகொத்தளம் பகுதியை அடைந்த பின்னர், பேசின் பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ராஜாஜி சாலை, ஈ.வெ.ரா சாலை மற்றும் டாக்டர் அம்பேத்கர் காலேஜ் சாலை ஆகிய சாலைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பேசின் பாலம் சாலையில் வரும்போது, சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.
ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயிண்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்
சூளை நெடுஞ்சாலையில் ஊர்வலம் வரும்போது நாராயணாகுரு சாலை, ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல வாகன ஓட்டிகளுக்கு அனுமதி கிடையாது. வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஊர்வலம் வரும்போது, டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. வாகனங்கள் நாராயணா குரு சாலை வழியாக செல்லலாம்.

ஓட்டேரி சந்திப்பை ஊர்வலம் அடையும்போது, மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்கிள்ன் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.
கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தை ஊர்வலம் அடையும் போது, ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலனி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications