சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீபாவளிக்கு இதற்கு கட்டுப்பாடு இல்லை.. எப்ப வேணாலும் பத்த வைக்கலாம்

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி நாளன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் மத்தாப்பு, புஸ்வாணத்துக்கு எவ்விர நேரக்கட்டுப்பாடும் இல்லை என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

வரும் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே அது பட்டாசுதான். ஆனால் பட்டாசுகள் வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மனுவை விசாரித்த நீதிமன்றம் நாடு முழுவதும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து 3 மணி நேரமாக நீட்டிக்க தமிழக அரசு கேட்டு கொண்டது.

மியாமி விமான நிலையத்தை அப்படியே தரைமட்டமாக்கப் போறேன்.. பீதி கிளப்பிய உபி வாலிபர்! மியாமி விமான நிலையத்தை அப்படியே தரைமட்டமாக்கப் போறேன்.. பீதி கிளப்பிய உபி வாலிபர்!

உத்தரவு

உத்தரவு

அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இந் நிலையில் காலை 4 முதல் 5 மணி வரையும் இரவு 9 முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் நிர்ணயம் செய்தது. வேண்டுமானாலும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இந்த நிலையில் தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பட்டாசு வெடிக்க தடை

பட்டாசு வெடிக்க தடை

அப்போது தீயணைப்பு துறை டிஜிபி மகேந்திரன் கூறுகையில் பட்டாசு வெடிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். பின்னர் சத்தமாக வெடிக்கும் பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

புஸ்வாணம்

புஸ்வாணம்

மத்தாப்பு புஸ்வாணம் உள்ளிட்டவற்றை வெடிக்க தடை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அது போல் ராக்கெட்டுகளுக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லை என்றார். இதனால் குட்டீஸ்களும் இளைஞர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

English summary
There will no restriction for Mathappu and flower pot on Deepavali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X