இளையராஜா முன்னிலையில் காதலியை கரம் பிடித்தார் தெருக்குரல் அறிவு! திருமாவளவன் வாழ்த்து
சென்னை: இளையராஜா முன்னிலையில் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு திருமணம் நடைபெற்றிருக்கிறது. தனது நீண்ட நாள் காதலியான கல்பனாவை அறிவு கரம்பிடித்துள்ளார்.
சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் திருமாவளவனை சந்தித்து அறிவு-கல்பனா தம்பதியினர் வாழ்த்து பெற்றனர். அப்போது அம்பேத்கர் பாடலை பாடி மணமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகியிருந்த காலா திரைப்படத்தின் மூலம் அறிவு திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதற்கு முன்னர் சின்ன சின்ன ராப் பாடல்களை அவர் பாடியிருந்தாலும், காலாதான் அறிவுக்கு வெளிச்சம் கொடுத்தது. இந்த திரைப்படத்தின் பின்னணி பாடகர் யார் என்று கேட்கும் அளவுக்கு அறிவு அதிரடியாக சினிமா துறையில் என்ட்ரியாகியிருந்தார்.
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அறிவை, கோலிவுட் திரையுலகின் உச்சிக்கு கொண்டு சென்றது. அந்த திரைப்படத்தில் வந்த 'வாத்தி ரெய்டு' பாடல் இன்றளவும் பிரபலமாக இருக்கிறது.
இது தவிர 'என்ஜாய் என்சாமி', நெட்பிளிக்ஸுக்காக பாடிய 'அந்த கத', தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட ஸ்னோலின் குறித்தும், ஜம்மு காஷ்மீரில் கோயிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குறித்தும், ஆண்டி இந்தியன், கள்ளமௌனி உள்ளிட்ட பாடல்களும் பெரிதும் கவனம் பெற்றிருந்தன. இந்த பாடல்கள் அறிவை பிரபலமான ராப் இசைப்பாடகராக மாற்றியது.

ராப் குறித்து பாடினாலும் தமிழின் நாட்டுப்புற பாடல்கள் மீது அறிவு மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். அதேபோல சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை அறிவு தனது பாடலின் பாடு பொருளாக கொண்டிருந்தார். இப்படி இருக்கையில்தான் கடந்த 2022ம் ஆண்டு, தான் கல்பானா அம்பேத்கர் எனும் பெண்ணை காதலிப்பதாக அறிவித்தார் அறிவு.
பா.ரஞ்சித் தலைமையில் ஆண்டுதோறும் நடக்கும் மார்கழி மக்களிசை நிகழச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில், கல்பனா அம்பேத்கரும் ஒருவர். இந்நிலையில் இவர்களது திருமணம் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா ஸ்டூடியோவில், இளையராஜா முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து இன்று மாலை சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் திருமாவளவனை சந்தித்து அறிவு-கல்பனா வாழ்த்துகளை பெற்றனர். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications