நாளை பதவியேற்கும் ஸ்டாலினின் புதிய அமைச்சரவை.. இந்த '8' மாவட்டங்கள் மட்டும் அப்செட்.. காரணம் இதுதான்
சென்னை: நாளை பதவியேற்கவுள்ள அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது அம்மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சராக நாளை திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்கிறார். கொரோனா பரவல் காரணமாக நாளை காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
அவருடன் சேர்ந்த 34 பேர் தமிழக அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். அவர்களுக்கான துறைகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக பிரதிநிதித்துவம்
இதில் மண்டல வாரியாக கிட்டதட்ட அனைத்து மண்டலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுத்தே உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 9 பேர், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 8 பேர், தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த 9 பேர், மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மிஸ்ஸாகும் சில மாவட்டங்கள்
அதேநேரம் சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் இதில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இதனால் கோவை மாவட்டத்திலிருந்து ஸ்டாலின் அமைச்சரவையில் யாரும் இடம் பெறவில்லை.

காவிரி டெல்டா
தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகியவை உள்ளடக்கிய காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 தொகுதிகளில் திமுக 15 தொகுதிகள் வென்றிருந்தது. இருப்பினும், இந்த பகுதியிலிருந்து அமைச்சரவையில் யாரும் இடம் பெறவில்லை. அதேபோல தேனி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் யாருக்கும் அமைச்சர் வாய்ப்பு தரப்படவில்லை.

ஸ்டாலின் அமைச்சரவை
ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவையில், கடந்த முறை கருணாநிதி அரசில் அமைச்சர்களாக இருந்த 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 15 புதுமுகங்களுக்கு இந்த முறை அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக தலைவர் ஸ்டாலின் நாளை காலை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார். இந்நிலையில், "கொரோனா காலம் என்பதால் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவை வீட்டிலிருந்தே காணுங்கள். உங்களது உடல் நலம் முக்கியம்" என திமுக தொண்டர்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications