நாடு முழுக்க பெண்களுக்கு ரூ.1000 உரிமை தொகை + ஆளுநருக்கு செக்! திமுக வாக்குறுதியில் டாப் 5 அதிரடி
சென்னை: 2024 லோக்சபா தேர்தலுக்காக திமுக சார்பாக தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.
திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
கடந்த வாரம் காங்கிரஸ் உடன் திமுக உடன்படிக்கையை மேற்கொண்டது. லோக்சபா தேர்தல்: காங். போட்டியிடும் 10 தொகுதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
போட்டியிடும் தொகுதிகள் விவரம்:
திமுக - 21 ( வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்பத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளகுறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பூர், தஞ்சாவூர், தேனி , தூத்துக்குடி, தென்காசி, )
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி (தமிழ்நாட்டில் திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர், கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறையில் காங்கிரஸ் போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது)
வாக்குறுதிகள்: 2024 லோக்சபா தேர்தலுக்காக திமுக சார்பாக தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் டாப் 5 வாக்குறுதிகள் அதிகம் கவனம் பெற்றுள்ளன
1 நாடு முழுவதும் பெண்களுக்கு மாதம் ரூ1,000 நிதி உதவி
2 நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
3 பெட்ரோல் விலை ரூ75-க்கு விற்பனை செய்யப்படும்
4 நாடு முழுவதும் மாணவர்கள் கடன்கள் ரத்து செய்யப்படும்
5 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ500க்கு குறைக்கப்படும்
மற்ற வாக்குறுதிகள்:
கவர்னர் பதவி ஒழிக்கப்படும் வரை, மாநிலத்திற்கு ஒரு கவர்னரை மாநில முதல்வரின் ஒப்புதலோடு நியமிக்க வேண்டும். ஆளுநர்களுக்கு குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கும் பிரிவு 361 திருத்தப்படும்.
பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது
திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்
100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்
இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை
ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படும்
இஸ்லாமியர் நலனுக்கான சச்சார் கமிட்டி அறிக்கை பரிந்துரைகள் தாக்கல் செய்யப்படும்
மாணவர்களுக்கு வட்டியில்லாமல் ரூ.4 லட்சம் கடன் வழங்கப்படும்
சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும்
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மத்திய அரசு தேர்வு
புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்
பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு உடனே அமல்படுத்தப்படும்
இந்தியா முழுவதும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்












Click it and Unblock the Notifications