"மனசு புண்படுது".. ராமருக்காக வரிந்து கட்டி வந்த அதிமுக.. அப்பாவு "ஆக்சன்".. ஸ்டாலின் சுளீர் பதிலடி
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ராமருக்கு எதிராக உறுப்பினர்கள் பேசிவிட்டதாக அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம் வைத்துள்ளார். அவரின் விமர்சனத்திற்கு இன்று முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
சேது சமுத்திர திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டசபையில் இன்று அதிரடியாக தீர்மானத்தைத் தாக்கல் செய்து உள்ளார். அவரின் தனி தீர்மானம் தொடர்பாக சட்டசபையில் தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி, ராமாயணம் ஒரு கற்பனை என்று இந்திய அரசியல் தலைவர்கள் பலர் சொல்லி இருக்கிறார். அண்ணல் காந்தி தொடங்கி அரசியல் தலைவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பலர் இதை உறுதி செய்துள்ளனர். அதனால் சேது சமுத்திர திட்டத்தை தொடங்கி ஆக வேண்டும். இந்த திட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு கொடுப்போம். இந்த திட்டம் வந்தால் நாகையில் கடல் போக்குவரத்து அதிகம் ஆகும். நாகை வேகமாக வளர்ச்சி அடையும். அதனால் இதை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

எதிர்ப்பு
இதையடுத்து பேசிய அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறோம், எதிர்க்கிறோம் என்று சொல்லி இருந்தால் பிரச்சனை இருக்காது. சிலர் அதிமுகவை எதிர்க்கிறார்கள். சிலர் ராமரை, இந்து மதத்தை எதிர்க்கிறார்கள். உலகில் 100 கோடிக்கும் மேல் மக்கள் பின்பற்றும் மதமான இந்து மதம் இருக்கிறது என்று கூறினார். இதில் மத ரீதியாக சில புகார்களை பொள்ளாச்சி ஜெயராமன் வைத்தார். இதையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, பொள்ளாச்சி ஜெயராமன் சொன்ன சில வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்தே நீக்குவதாக அறிவித்தார். இதையடுத்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், ராமரை பற்றி இங்கே சிலர் பேசிய விஷயங்கள் எங்கள் மனதை புண்படுத்தும் விதமாக இருக்கிறது. அவை குறிப்பில் இருந்து அதை நீக்க வேண்டும்.

பொள்ளாச்சி ஜெயராமன்
இங்கே ராமர் என்பவரை பற்றி தவறாக பேசி உள்ளனர். 100 கோடி பேர் பின்பற்றும் மதத்தின் நாயகர் ராமர். நாங்கள் இரு நாளைக்கு 100 முறை ராமர் ராமர் என்று சொல்கிறோம். அப்படிப்பட்ட கடவுள் ராமரை கதாபாத்திரம் என்று சொல்வதற்கு அவர் என்ன சினிமாவில் நடித்தாரா? ராமர் அவதார புருஷர், என்றார். குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு.. அப்படி என்றால் சேது சமுத்திர திட்டத்தை ராமர் சமுத்திர திட்டம் என்று சொல்லலாம், என்று கூறினார். தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், சேது சமுத்திர திட்டம் 2427 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு, பல கோடி செலவு செய்யப்பட்டு, மணல் அள்ளப்பட்டு உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஸ்டாலின்
கடலில் நடக்கும் அந்த விஷயங்கள் பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறிய பொள்ளாச்சி ஜெயராமன் சில வார்த்தைகளை பயன்படுத்தினார். அந்த வார்த்தைகளையும் நீக்கும்படி சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், இந்த திட்டம் பற்றி மீனவர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும். அவர்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதை கூடவா எதிர்க்கிறீர்கள், என்றார். இதையடுத்து குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், இந்த திட்டம் அடிக்கல் நாட்டும் போதே அதற்கான ஆய்வுகளை எல்லாம் செய்துள்ளனர்.

என்ன சொன்னார்?
எல்லா விதமான ஆய்வுகளையும் செய்து உள்ளனர். மீனவர்கள், அப்பகுதி மக்கள் எல்லோரிடமும் ஆய்வு செய்து, ஆலோசனை செய்துதான் இந்த திட்டத்தை அடிக்கல் நாட்டினோம். அப்படி இருக்கும் போது அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், என்று கூறினார். இதையடுத்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், மீனவர்களிடம் பேசி ஆலோசனை செய்து இதில் முடிவு எடுக்க வேண்டும். மக்களுக்கு அவசியமான திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் தயார். அது எந்த திட்டமாக இருந்தாலும் அதற்கு நாங்கள் ஆதரவு தருவோம். அப்படி இந்த திட்டத்திற்கும் ஆதரவு தருகிறோம், என்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications