ஜெயிச்சது இவங்க.. வரிப்பணம் உங்களுது! 1.05 லட்சம் சம்பளம் போக தமிழக எம்எல்ஏக்களுக்கு 5 விஐபி வசதி
சென்னை: தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜய் மெஜாரிட்டியை நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் சலுகைகள் குறித்த விவாதம் எழுந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகும் ஒருவருக்கு அரசு வழங்கும் ஊதியம், பயணச் சலுகைகள் மற்றும் இதர வசதிகள் என்னென்ன? ஒரு மக்கள் பிரதிநிதியின் அதிகாரப்பூர்வமான வருமானம் குறித்த விவரங்களை இங்கே நாம் சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழக அரசியல் களம் இப்போது தவெக தலைவர் விஜயை சுற்றித்தான் ஸ்பீடாக நகர்ந்து கொண்டிருக்கிறது.. அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், இனி மெஜாரிட்டியை நிரூபித்தே ஆக வேண்டும என்ற நெருக்கடியில் அவர் தீவிரமாக வேலை செய்து வருகிறார்.

தவெக விஜய் எம்.எல்.ஏக்கள்
ஒருவேளை விஜய் சட்டமன்றத்திற்குள் நுழைந்தால், அவரது எம்எல்ஏக்களுக்கு கிடைக்கும் சம்பளம் என்ன? கிடைக்கப்போகும் நிஜமான வசதிகள், சலுகைகள் என்ன்ன தெரியுமா?
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, ஒரு எம்.எல்.ஏவுக்கு மாத சம்பளம் ₹1,05,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது முழு சம்பளம் கிடையாது. இதில் அடிப்படை சம்பளம் என்பது ₹30,000-தான். மிச்ச தொகை தொகுதிச் செலவு, போன், வாகன செலவு எனப் பல வகையில் தரப்படுகிறது.
தமிழக எம்எல்ஏக்களுக்கு சம்பளம்
குறிப்பாக வண்டி மெயின்டனன்ஸ் மற்றும் பெட்ரோல் செலவுக்காகவே மாதம் ₹25,000 கைக்கு வரும். இதுபோக, சட்டசபை நடக்கும் நாட்களில் அல்லது குழு கூட்டங்களில் கலந்து கொண்டால் ஒரு நாளைக்கு ₹2,500 "படி" தனியாகத் தரப்படும். ஒரு மாசத்தில் எத்தனை நாள் கூட்டத்தில் இருக்கிறார்களோ அத்தனை நாளைக்கு இந்தத் தொகை ஏறும்.
சொந்த ஊரிலிருந்து சென்னை வந்து போக எம்.எல்.ஏ-க்கள் சொந்தக் காசை செலவு செய்யத் தேவையில்லை. எம்.எல்.ஏ-க்களுக்கு ரயில் மற்றும் விமானத்தில் போக வருஷத்துக்கு ₹1,00,000 மதிப்பிலான கூப்பன்கள் தரப்படுகிறது. அதேபோல் தமிழக அரசு பஸ்களை எப்போது வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை வரும்போது தங்குவதற்கு சேப்பாக்கத்தில் எம்.எல்.ஏ ஹாஸ்டல் இருக்கிறது. ரொம்பக் கம்மியான வாடகையில் அங்கே அறைகள் ஒதுக்கப்படும்.
ஆபீஸ் & உதவியாளர்
தொகுதியில் மக்கள் குறைகளைக் கேட்கவும், வேலைகளைக் கவனிக்கவும் ஒரு தனி ஆபீஸ் போட்டுக்கொள்ள அரசு அனுமதிக்கும். அங்கே ஒரு பி.ஏ அதாவது நேர்முக உதவியாரை வைத்துக்கொள்ளலாம். அந்த உதவியாளருக்கான சம்பளத்தை அரசே நேரடியாக வழங்கும். இதுதவிர, புது கார் வாங்க நினைக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கு வட்டி இல்லாக் கடன் அல்லது மிகக் குறைந்த வட்டியில் கடன் வசதியும் செய்து தரப்படுகிறது.
மெடிக்கல் முதல் பென்ஷன் வரை
அரசு மற்றும் பெரிய தனியார் ஆஸ்பத்திரிகளில் எம்.எல்.ஏ-க்களுக்கும் அவர் குடும்பத்துக்கும் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக வருஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவப் படி ஒதுக்கப்படுகிறது.
அதேபோல், ஒருமுறை எம்.எல்.ஏவாக இருந்து பதவி முடிந்தாலும் கவலைப்பட தேவையில்லை. 2025 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்களின்படி, முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு மாசம் ₹35,000 பென்ஷன் உண்டு. அவர்கள் இறந்தால், குடும்பத்துக்கு ₹17500 ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வு பெற்ற பிறகும் இலவச பஸ் பயணம் மற்றும் மருத்துவ சலுகைகள் தொடரும் என்பது கூடுதல் பிளஸ்.
அமைச்சர்கள் & சி.எம் நிலை என்ன
இது சாதாரண எம்.எல்.ஏ-க்களுக்கான விவரம் மட்டுமே. இதுவே அமைச்சர்கள் அல்லது முதலமைச்சர் ஆனால் பொறுப்புக்கு ஏற்ப சம்பளம் இன்னும் கூடும். முதலமைச்சரின் மொத்த மாத வருமானம் சுமார் ₹2,85,000 வரை இருக்கும். கூடவே அரசு பங்களா, கார், கூடுதல் பாதுகாப்பு என்று ஏகப்பட்ட வசதிகள் கிடைக்கும்.
ஆக, சட்டமன்றத்திற்குள் வரும் உறுப்பினர்களுக்கு இந்த வசதிகளும் கிடைக்கும். அதனால் அரசியல் பதவியோடு சேர்த்து பல அரசு வசதிகளும் எம்.எல்.ஏ-க்களுக்கு கிடைக்கிறது. மெஜாரிட்டியுடன் சட்டமன்றத்திற்குள் வந்தால், மற்ற உறுப்பினர்களைப் போலவே இந்தச் சலுகைகளும் விஜய்க்கு பொருந்தும்...!!!
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications