Thilagabama: ஓடாய் உழைத்தும், கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்தும் புறக்கணிக்கும் பாமக.. விரக்தியில் திலகபாமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓடாய் உழைத்தும், கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி கொடுத்தும் கூட தொடர்ந்து புறக்கணித்ததால் விரக்தியடைந்த திலகபாமா பாமகவில் இருந்து விலக முடிவு எடுத்தள்ளதாக தெரிகிறது.

பாமகவின் பொருளாராக இருப்பவர் திலகபாமா. சிவகாசியை சேர்ந்த திலகபாமா நாடார் சமூகத்தை சேர்ந்தவர். பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். திலகபாமாவின் குடும்பமே மருத்துவர் குடும்பம் தான்.. கணவர் மருத்துவர்.. இரண்டு மகன்களும் மருத்துவர்.. இரண்டு மருமகள்களும் மருத்துவர் என முழுக்க முழுக்க டாக்டர் பேமிலி. இவரது கணவருக்கு சொந்தமாக சிவகாசியில் மருத்துவமனை ஒன்றே உள்ளது.

Thilagabama Frustrated as PMK Continues to Ignore Her Despite Her Tireless Efforts and Massive Financial Contributions

அன்புமணி பிரசார வாகனம்

இப்படி இருந்த போதிலும், வேறு வேறு கம்யூனிட்டியாக இருந்தாலும் அதையெல்லாம் யோசிக்காமல், பாமக மீது கொண்ட அதீத ஈடுபாடு காரணமாக அக்கட்சியில் இணைந்து கடுமையாக உழைத்தார். கட்சிக்காக கை காசை போட்டு செலவு செய்து வந்தார். பிரசாரத்தின் போதும் சரி, கூட்டங்கள் நடத்தும் போதும் சரி அன்புமணி மற்றும் கட்சிக்காக பணத்தை வாரி இறைத்து, கட்சிக்காக உழைத்தார். இதனால் பொருளாதார ரீதியாகவும் கடும் பின்னடைவுகளை சந்தித்தார்.

அன்புமணி ராமதாசுக்காக பிரசார வாகனத்தையே திலகபாமா தான் சொந்த காசை போட்டு வாங்கி கொடுத்துள்ளார். பாமகவிற்காக இப்படி ஓடாய் உழைத்தும், கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி கொடுத்த திலகபாமாவுக்கு கிடைத்தது என்னவோ புறக்கணிப்புகள் மட்டும் தான்.

புறக்கணித்த பாமக

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ஐ பெரியசாமிக்கு எதிராக திலகபாமா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் விஐபி வேட்பாளர் என்று தெரிந்தும், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறக்கூடியவர் என்பதை அறிந்தும் அந்த தொகுதியில் திலகபாமாவுக்கு பாமக வாய்ப்பளித்தது. எனினும் கட்சியின் முடிவுக்காக எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அந்த தொகுதியில் போட்டியிட்டார்.

எதிர்பார்த்தது போலவே திலகபாமா ஐ பெரியசாமியிடம் பெரும் தோல்வியடைந்துவிட்டார்.. ஆனால் அப்போதும் கூட திலகபாமா பாமகவிற்காக உழைத்தார். ஆனால் மீண்டும் கடந்த சட்டசபை தேர்தலில் விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதியில் களம் இறக்கி அவரை சோதித்தது. தலித் சமூக மக்கள் அதிகம் கொண்ட, வன்னியர்களுக்கு எதிரான வாக்குகள் அதிகம் உள்ள தொகுதியான பெரம்பூரில் நாடார் சமூகத்தை சேர்ந்த இந்து பெண்மணியான திலகபாமாவை நிறுத்தி இருந்தார்கள்.

விலக முடிவு?

அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளை பெற்ற பாமக, வெற்றி வாய்ப்பு மிகவும் குறைந்த தொகுதியான பெரம்பூர் தொகுதியை திலகபாமாவுக்கு ஒதுக்கியது. அதுவும் விஜய் போன்ற பிரபலமான நடிகருக்கு எதிராக இவரை வேட்பாளராக அறிவித்தது. தேர்தல் முடிவும் அப்படியே இருந்தது. 10 ஆயிரம் வாக்குகள் கூட வாங்காமல் தோல்வியை சந்தித்தார். தோல்வி கிடைக்கும் தொகுதி என்று தெரிந்தே அவருக்கு வாய்ப்பளித்து இருந்தனர். இதனால் திலகபாமாவின் குடும்பத்திற்கே அவர் மீது வெறுப்பு வந்தது.

குடும்பத்தினரை பிரிந்தபோதும், பாமக மீது உள்ள அபரிமிதமான ஈடுபாடு காரணமாக பாமகவிற்காகவே தொடர்ந்து உழைத்து வந்தார். அப்பா மகன் பிரச்சினையின் போது கூட அன்புமணி பக்கம் இருந்து கட்சி பலம்பெற உழைத்தார். ஆனால் இப்பொது வரை அவருக்கு எதுவுமே முக்கியத்துவம் கொடுக்காமல் பாமக தொடர்ந்து புறக்கணித்து வந்ததால் திலகபாமாவின் குடும்பத்தினர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்களாம். இதனால் பாமகவில் இருந்து விலகிவிடலாமா? என திலகபாமா யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+