எந்த தேதியில் பிறந்தவர்கள் யாரை திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் தெரியுமா
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர். சில திருமணங்கள் ஒரே நாளில் முடிந்து போய் விடுகின்றன. சில திருமணங்கள் மட்டுமே நிலைத்து நிற்கின்றன. மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு நம்முடைய பிறந்த நாளுக்கு சரியான எண்ணில் பிறந்தவர்களை தேர்வு செய்ய வேண்டும்
சென்னை: எண்கள் சிலரின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை கொண்டவை. பிறந்த எண் கூட்டுத்தொகையும் பெயரின் கூட்டுத்தொகையும் சரியானதாக இருக்க வேண்டும். திருமணம் செய்யும் போது கூட நம்முடைய பிறந்த தேதிக்கு பொருத்தமான எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் திருமணம் நிலைத்து நிற்கும் என்று எண் கணித நிபுணர்கள் கணித்துள்ளனர். எந்த எண்ணில் பிறந்தவர்கள் யாரை திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று பார்க்கலாம்.
1,10,19,28 ஆம் தேதியில் பிறந்தவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை மணந்து கொள்ளலாம். 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம். 1ம் எண்ணில் பிறந்த பெண்களை தவிர்க்க வேண்டும். 1ஆம் எண் சூரியன் இந்த தேதியில் பிறந்த ஆண் அதே போல 1ஆம் எண்ணில் பிறந்த துணையை தேர்வு செய்தால் அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.

2,11,20,29 ம் தேதியில் பிறந்தவர்கள் திருமணம் செய்ய 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். 7ஆம் தேதியில் பிறந்த பெண்ணே மிகவும் சிறந்தவள். 8 அல்லது 9 எண் எண்களில் பிறந்த பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. அப்படி திருமணம் செய்தால் வாழ்க்கையே நரகமாகிவிடுமாம்.
3,12,21,30 ஆம் எண்களில் பிறந்தவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும். 2ஆம் எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.
4,13,22,31ஆம் தேதியில் பிறந்தவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 ஆம் எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக்கு நன்மையே செய்வார்கள். 4ஆம் எண்களில் பிறந்த ஆண்கள் 6ஆம் எண்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்து கொண்டால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
5,14,23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் உணர்வுகள் அதிகரிக்கும். 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். 1, 3, 6 ஆம் தேதிகளில் பிறந்தவர்களையும் மணக்கலாம். 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
6,15,24 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு 6, 9 ஆம் எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியும்! 1,3, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

7,16,25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 1,2 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் இனிய இல்லறம் அமையும். 8ஆம் தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை கசந்து விடும்.
8,17,26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம்.2,7, 8ஆம் எண் கொண்ட பெண்களை மட்டும் திருமணம் செய்யக்கூடாது. 9ஆம் எண்ணில் பிறந்த பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள்.
9,18,27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் தாம்பத்தியத்தில் மிகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால், இவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். கூட்டுத்தொகை, பிறந்த எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்தால் வாழ்க்கையே கசந்துவிடும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications