சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரட்டை இலை வழக்கில் ஆஜரான திருமாறனுக்கு அதிமுக மாநில வழக்கறிஞர் அணியில் பதவி

அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சி.திருமாறனை மாநில வழக்கறிஞர் அணி இணை செயலாளராக தலைமை கழகம் நியமித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இரட்டை இலை வழக்கு, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் கட்சிக்காகவும், கட்சி சார்ந்தவர்களுக்காகவும் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் சி.திருமாறன் அதிமுக மாநில வழக்கறிஞர் அணியின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக வழக்கறிஞர் தொழில்புரிந்து வரும் சி.திருமாறன், கடந்த 2009ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து வழக்கறிஞர் அணிக்காக பணியாற்றி வருகிறார்.

Thirumaran appointed to the AIADMK state lawyers team

2011ஆம் ஆண்டு அதிமுக தென் சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை தலைவராக மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்.

2018ல் அதிமுக தென் சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் சிறப்பு பிளீடராக பணியாற்றி வருகிறார்.

அதிமுக கட்சி தொடர்புடைய பல்வேறு வழக்குகளில் ஆஜராகி உள்ளார். குறிப்பாக இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து வழக்கு ஆகியவற்றில் ஆஜராகியுள்ளார். 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரானார்.

தீபாவளி: மகனாக இருந்தாலும் நரகாசூரனை கொன்ற சத்யபாமா - நரக சதுர்த்தசி புராண கதைதீபாவளி: மகனாக இருந்தாலும் நரகாசூரனை கொன்ற சத்யபாமா - நரக சதுர்த்தசி புராண கதை

டி.டி.வி.தினகரன் ஆரதவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் அரசு கொறடா தரப்பில் ஆஜராகி உள்ளார். திண்டிவனம் தொகுதி தேர்தல் வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ.வான எஸ்.பி.ராஜேந்திரனுக்கு ஆதரவாக ஆஜராகி உள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில் அதிமுக தரப்பில் ஆஜரானவர். கட்சி தொடர்பான வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர் சி. திருமாறனுக்கு வழக்கறிஞர் அணியில் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

English summary
Advocate C. Thirumaran, who has been appearing in various cases for the party and its affiliates in the double-leaf case and the disqualification of MLAs, has been appointed as the Joint Secretary of the AIADMK State Attorney's Team. An announcement has been made for this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X