திருமாவளவன் ஏன் "அங்கே" ஓடறார்.. ரம்ஜான் வந்தால் இவருக்கு என்னவாம்.. கேட்பது யார்னு பாருங்க

திருமாவளவன் மீது இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் குற்றஞ்சாட்டி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமாவளவன், சீமான், திராவிட கழகம் இவர்கள் அனைவரும் சேர்ந்து பிஎப்ஐ, எஸ்டிபிஐ இவங்களை எல்லாம் ஆதரித்து, அவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று அர்ஜுன் சம்பத் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஆர்எஸ்எஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளின் பேரணிக்கு தமிழக காவல் துறை அனுமதி வழங்க மறுத்தது. இதற்கு எதிராக, ஆர்எஸ்எஸ் ஹைகோர்ட்டில் முறையிட்டது.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அக்டோபர் 2ம் தேதி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்தது...

துப்பாக்கி

துப்பாக்கி

எனினும், அக்டோபர் 2-ம் தேதிக்கு பதில் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணிக்கு அனுமதி வழங்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது... நவம்பர் 6ம் தேதி பேரணிக்கு அக்டோபர் 31ம் தேதிக்குள் காவல்துறை அனுமதி தராவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது. இந்நிலையில், ஒரு தனியார் சேனலுக்கு இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில் ஆர்எஸ்எஸ்ஸை உயர்த்தி பிடித்து கருத்து கூறியுள்ளதுடன், திராவிட கட்சிகளை சரமாரியாக விமர்சித்துள்ளார்..

 யூனிபார்மில் தடி

யூனிபார்மில் தடி

அதேசமயம், அர்ஜுன் சம்பத் பேசிய இந்த பேச்சு சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது. அவர் பேசியதன் சின்ன சுருக்கம்தான் இவை: "கோட்சேயும் சனாதனி.. காந்தியும் சனாதனி.. காந்தியும் இந்துத்துவாதான்.. கோட்சேயும் இந்துத்துவாதான்.. இருவரும் சுதந்திர போராட்ட வீரர்கள்.. இருவருமே ராம பக்தர்கள்.. காந்தியின் கொலையை நாங்கள் நியாயப்படுத்தவில்லை.. அவரை சுட்டது தவறு.. அதற்கு தண்டனையும் தந்தாச்சு.. ஆனால், கோட்சேவின் தத்துவத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்..

அஃபிடவிட்

அஃபிடவிட்

"நான் ஏன் காந்தியை கொன்றேன்" என்று கோட்சேவே கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்திருக்கிறார்.. அதில் உள்ள நியாயமான காரணங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.. ஆனால், கொலை செய்த குற்றவாளியை, தீவிரவாதியை, நாங்கள் ஆதரிக்கவில்லை.. கோட்சேவை ஆதரிக்கிறோமே தவிர அவரது கொலையை ஆதரிக்கவில்லை.. ஆர்எஸ்எஸ் ஒரு மதவாத அமைப்பு கிடையாது.. ராஷ்டிரிய சேவக சங்கம்.. இந்துமத சேவக சமயம் கிடையாது.. ஆர்எஸ்எஸ் யூனிபார்மில் தடி இருக்கே ஏன் தெரியுமா? அதுவும் இந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான்..

டிரெயினிங்

டிரெயினிங்

உடலில், ஆன்மாவில், மனதில் பலமாக இருக்க வேண்டும்.. அதுதான் இங்கு பயிற்சியே.. அதற்குதான் யூனிபார்மில் தடி உள்ளது.. கலவரம் செய்வதற்காக இல்லை.. ஆர்எஸ்எஸ்ஸினால் எத்தனையோ ரத்தினங்கள் இந்த நாட்டில் உருவாகியிருக்கிறார்கள்.. அத்வானியையும் சேர்த்து சொல்கிறேன்.. பாபர் மசூதி என்று யாரும் சொல்லாதீர்கள்.. பாபர் கட்டிடம் என்று சொல்லுங்கள்.. அந்த கட்டிடத்தை இடிப்பதுதான் நியாயம்.. அதை கலவரமாக பார்க்க கூடாது.. இந்த நாட்டிற்கான கரசேவையாக பார்க்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் இருந்தால் எப்போதுமே நாட்டில் பொதுஅமைதி ஏற்படும்..

 டிரெயினிங்

டிரெயினிங்

உடலில், ஆன்மாவில், மனதில் பலமாக இருக்க வேண்டும்.. அதுதான் இங்கு பயிற்சியே.. அதற்குதான் யூனிபார்மில் தடி உள்ளது.. கலவரம் செய்வதற்காக இல்லை.. ஆர்எஸ்எஸ்ஸினால் எத்தனையோ ரத்தினங்கள் இந்த நாட்டில் உருவாகியிருக்கிறார்கள்.. அத்வானியையும் சேர்த்து சொல்கிறேன்.. பாபர் மசூதி என்று யாரும் சொல்லாதீர்கள்.. பாபர் கட்டிடம் என்று சொல்லுங்கள்.. அந்த கட்டிடத்தை இடிப்பதுதான் நியாயம்.. அதை கலவரமாக பார்க்க கூடாது.. இந்த நாட்டிற்கான கரசேவையாக பார்க்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் இருந்தால் எப்போதுமே நாட்டில் பொதுஅமைதி ஏற்படும்..

இமாம்கள்

இமாம்கள்

ரதயாத்திரை மூலம் நல்லிணக்கம்தான் இந்த நாட்டிற்கு ஏற்பட்டது.. ஆர்எஸ்எஸ், இப்போது எல்லா சமுதாய, சமய தலைவர்களை நேரில் சந்தித்து, இந்தியா என்ற ஒற்றுமையை ஒருங்கிணைத்து கொண்டிருக்கிறது. இப்போதுகூட, இமாம்களை சந்தித்து பேசிவிட்டு வந்தார்கள்.. அவர்களை பார்த்து, இமாம் என்ன சொன்னார் தெரியுமா? ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இந்த நாட்டின் தேச தந்தையாக பார்ப்பதாக சொன்னார்கள்.. ஆனால், இந்த திராவிட கழகமும், கம்யூனிஸ்ட்களும் இருக்காங்களே, இவங்கதான் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கிறார்கள்.. தவறாக அவர்களை வழிநடத்துகிறார்கள்..

 பாய் வீட்டு பிரியாணி

பாய் வீட்டு பிரியாணி

திருமாவளவன், சீமான், திராவிட கழகம் இவங்க எல்லாம் சேர்ந்து, சில முஸ்லிம்களை தூண்டிவிட்டு, பிஎப்ஐ, எஸ்டிபிஐ இவங்களை எல்லாம் ஆதரித்து, தவறாக வழிநடத்துகிறார்கள்.. இதை பற்றி கேட்டால் மத நல்லிணக்கம் என்கிறார்கள். திருமாவளவனின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்க்கிறோம்.. ரம்ஜான் வந்தால், திருமாவளவன் ஏன் அங்கே போய் நோன்பு ஏன் வைக்கிறார்? இஸ்லாமியரின் விரத முறைகளை கடைப்பிடிக்கிறேன் என்கிறார்.. அது அவர் விருப்பம்.. தாராளமாக செய்யட்டும்.. ஆனால், பட்டியலின மக்களை அதற்கு பலியாக்கக்கூடாது இல்லையா? இவர் மதம் மாறி போவேன் என்றால் என்ன அர்த்தம்? மதமாற்றத்தை ஊக்குவிப்பதாகத்தானே அர்த்தம்?

 வாஞ்சிநாதன்

வாஞ்சிநாதன்

இந்திய விடுதலைக்காக அதிக நாள் சிறைச்சாலையில் இருந்தவர் வீரசாவர்க்கர்.. வீரசாவர்க்கரின் தியாகத்தை, வீரத்தை, பெருமைப்படுத்தக்கூடிய வகையில், நிச்சயம் நாங்கள் விரைவில் செயல்படுவோம்.. பசும்பொன் அழைப்பின் பேரில் தமிழகத்துக்கு வந்து, மதுரை, சேலத்தில் சாவர்க்கர் ஆற்றிய பணிகள், சுற்றுப்பயணங்கள் ஏராளம்.. ஆனால், வாஞ்சிநாதன், சாவர்க்கர் போன்றோர் மீது இந்த கம்யூனிஸ்ட்களுக்கும், திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களுக்கும் எப்ப பார்த்தாலும் தவறான கட்டுக்கதைகளை விதைத்துவிட்டனர்.. இவர்கள்தான் பிரட்டிஷாருக்கு, ஜஸ்டிஸ் கட்சிக்கு வால் பிடித்தவர்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+