நல்ல வாய்ப்பு! தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை துணிந்து மூடுங்கள்! முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஸ்டாலின் துணிந்து முடிவெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் கிராமத்தில் கடந்த 20ஆம் தேதி ஒரு துக்க வீட்டில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல்நல பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் குடித்த சாராயம் விஷத்தன்மையுடன் இருந்தது. இதனால் அளவுக்கு மீறி சாராயம் குடித்தவர்களில் இதுவரை 60 பேர் பலியாகிவிட்டனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சத்தை நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை அரசியல் கட்சியினர் போய் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.
பெரும்பாலானோரின் விருப்பம் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுகவும் பாஜகவும் , பாமகவும் கேட்கிறது.
பூரண மதுவிலக்கு: இந்த நிலையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்குக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், ஜூன் 20 ஆம் தேதி நான் கருணாபுரத்திற்கு சென்றேன். அங்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தேன்.
12 குடும்பங்களை மட்டுமே சந்திக்க முடிந்தது. அங்கேயே தங்கிய நான் அடுத்த நாள் அதாவது 21 ஆம் தேதி நள்ளிரவு வரை கள்ளக்குறிச்சியில் உள்ள பாதிக்கப்பட்ட கிராமங்களில் மக்களை சந்தித்தேன். ஏறத்தாழ 57 குடும்பங்களையும் சந்தித்தேன். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.
சிறுத்தைகளின் போராட்டம்: கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் கோரிக்கை என்னவென்றால் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள் என கைகூப்பி கேட்டனர். கள்ளச்சாராயத்தை ஒழியுங்கள் என அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. அதனால்தான் சிறுத்தைகளின் போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.
கணவன், மனைவி இருவருமே இறந்த வீட்டிற்கு போயிருந்தேன். அங்கு அந்த கணவர் சுரேஷ் தினமும் காலை 5.30 மணிக்கெல்லாம் சாராயம் குடிப்பார் என அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் அவருடைய மனைவிக்கும் குடிப்பழக்கம் இருந்ததா என நான் கேட்ட போது அவர்கள் சொன்னது வேதனையாக இருந்தது. அந்த பெண்ணுக்கு பவுத்திரம். இதனால் காலை கடன்களை கழிக்க முடியாது.
கணவன், மனைவி பலி: இதனால் ஓம வாட்டர் குடித்தால் நல்லது என நினைத்து தனது மகளை கடைக்கு அனுப்பினாராம். அந்த சிறுமியும் வெளியே சென்றுவிட்டார். கணவர் சுரேஷ் இரு சாராய பாக்கெட்டுகளை வாங்கி வைத்துள்ளார். ஒரு பாக்கெட் சாராயத்தை டம்ளரில் ஊற்றி குடித்துவிட்டு மீதமுள்ள பாக்கெட்டையும் பிரித்து டம்ளரில் ஊற்றிய போது போன் வரவே அதை பேச வெளியே சென்றுவிட்டார்.
இதையடுத்து அங்கு வந்த அவருடைய மனைவி வடிவு, அந்த சாராயத்தை ஓம தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார். கள்ளச்சாராய விவகாரத்தில் அண்ணாமலையும் எடப்பாடியும் திமுக அரசை விமர்சிக்கிறார்கள். இதற்காக நான் திமுகவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. இது உழைக்கும் மக்களின் பிரச்சினை!
மதுவால் மனித ஆற்றல் அழிகிறது. போதை குறித்த விழிப்புணர்வு இல்லாததுதான் குடிக்கு அடிமையாவதற்கு காரணம். மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மகளிர் மட்டும் பங்கேற்கும் மகளிர் மாநாட்டை நடத்த இருக்கிறோம். 5 லட்சம் பெண்களை திரட்டுவோம்.
துணியுங்கள்: மாநில அரசுக்கு எதிராகவோ ஆளும் கட்சிக்கு எதிராகவோ நடத்தவில்லை. இந்தியாவில் மனித வளத்தை பாதுகாக்க நடத்தப்படும் ஒரு நிகழ்வு. தமிழக அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள்- உங்களுக்கு மிகப் பெரிய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காலமெல்லாம் உங்கள் பெயர் இந்த மண்ணில் போற்றப்படும். இதற்கு டாஸ்மாக் கடைகளை மூடுவது என துணிந்து முடிவெடுக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications