தொலைந்த மாட்டை தேடி போனால் சுடுவீங்களா? 3 தமிழர்களின் உடல்களை அவசரமாக அகற்றியது ஏன்: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கர்நாடக வனத்துறை பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்தோரின் உடல்களைக் கொள்ளேகால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது தான் வழக்கம்.. ஆனால், இப்போது 3 தமிழர்களின் உடல்களை மைசூரூ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது கர்நாடக அரசு.. இந்த படுகொலை தொடர்பாக விசாரணையை தொடங்குவதற்கு முன்னரே, கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன" என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்திலுள்ள ஹனூர் அருகில், காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதிக்குள் தொலைந்த மாடுகளை தேடிச் சென்ற 4 தமிழர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் நாட்டு துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

Thirumavalavan

3 தமிழர்கள் படுகொலை

இதில், ம‌ரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த அந்தோனிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். படுகாமடைந்த மகிமை தாஸ் (48) மைசூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்..

3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழக எல்லையில் பெரும் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கால்நடைகளை தேடிச் செல்லும் கிராம மக்கள் மீது இதுபோன்ற கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்படுவதும், மனித உயிர்கள் பறிபோவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எல்லைப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் வனத்துறையின் நடவடிக்கைகள் அமைவதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதற்கு தீர்வு என்ன?

2 மாநில அரசுகளும் இணைந்து, முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி இதற்கான தீர்வை காண வேண்டி உள்ளது.. முக்கியமாக எல்லைப் பகுதியில் எழும் பிரச்சனைகளைத் தீர்க்க, 2 மாநில காவல்துறை மற்றும் வனத்துறையினர் அடங்கிய சோதனை குழுக்களை அமைக்க வேண்டும்.

இதுபோன்ற சூழல்களில் வனத்துறையினர் துப்பாக்கிப் பயன்பாட்டைக் குறைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்... இந்தச் சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதியும் நிவாரணமும் கிடைக்கச் செய்வதே உடனடித் தீர்வாக அமையும். அதைவிட்டுவிட்டு, எடுத்ததுமே துப்பாக்கியால் சுட்டுவீழ்த்துவது முறையற்றது.

சீமான் கேட்ட கேள்வி

இதைத்தான் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் காட்டமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.. "மானை வேட்டையாட வந்தவர்கள் என்று கர்நாடக வனத்துறை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறது? அப்படியே வேட்டையாட வந்தவர்களாக இருந்தாலும் அவர்களை சுட்டுக்கொல்ல கர்நாடக வனத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எந்த விசாரணையும் இல்லாமல் சுட்டுக்கொன்றது ஏன்? மானை சுட்டார்கள் என்றால் சுடப்பட்ட மான் எங்கே? மானின் உயிருக்கு இருக்கும் மதிப்பு மானத்தமிழன் உயிருக்கு இல்லையா? என்று நாம் தமிழர் கட்சி சீமான் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

திருமாவளவன் கண்டனம்

இந்நிலையில், விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவனும் இந்நிகழ்வுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.. அத்துடன் சில குற்றச்சாட்டுகளையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.. தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக அவர் பதிவு செய்துள்ளதாவது:

"கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டம், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் மற்றும் மகிமை தாஸ் ஆகியோர் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த தங்கள் மாடுகளை பிடிக்க வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அவர்கள் மீது கர்நாடக வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர், மகிமை தாஸ் ஒருவர் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளார்.

மூன்று தமிழர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு சாம்ராஜ் நகர் மாவட்ட ஹானூர் தாலுகாவில் போராட்டம் தொடர்கிறது. மேலும், கர்நாடகம் - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள தமிழர் கிராமங்களில் இன்னும் பதற்றம் தொடர்கிறது. தங்களின் வளர்ப்பு மாடுகளை பிடிக்கச் சென்றவர்களைப் பிடித்து, கர்நாடக வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுப் படுகொலை செய்ததாக அங்கு வாழும் தமிழர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மைசூருக்கு கொண்டு சென்றது ஏன்

வழக்கமாக அப்பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்தோரின் உடல்களைக் கொள்ளேகால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது தான் வழக்கம். ஆனால், தற்போது இம்மூவரின் உடல்களை மைசூரூ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது கர்நாடக அரசு.

இப்படுகொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னரே, கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் சட்டப்படி மேற்கொள்ளவிருக்கும் குற்றவியல் நடுவரின் (மாஜிஸ ட்ரேட்) விசாரணை அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை மறைக்கவும், வனத்துறை அதிகாரிகளைப் பாதுகாக்கவுமே உதவும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பது கேள்விக்குறியே ஆகும்.

கர்நாடக வனத்துறையினர் தமிழர்களுக்கு எதிராக நடத்தும் துப்பாக்கிச்சூடு புதிதாக நடந்த ஒன்று அல்ல. ஏற்கனவே, 2023ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் உள்ள கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ஏழு பேர் கர்நாடகம் - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் காவிரி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கர்நாடக வனத்துறை சித்ரவதை

அந்த துப்பாக்கிச் சூட்டில் ராஜா என்ற காரவடையான் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதற்கு முன்னர், கடந்த 2014ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்துள்ள கர்நாடக எல்லைப் பகுதியான செட்டிபட்டியைச் சேர்ந்த பழனியை கர்நாடக வனத்துறை பிடித்து, சித்திரவதை செய்து பின்னர் சுட்டுக் கொன்றனர்.

பழனியின் படுகொலையைக் கண்டித்து அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக அவ்வப்போது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தித் தமிழர்களைப் படுகொலை செய்வது தொடர்கதையாகவுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து கொலைவெறியாட்டம் நடத்திவரும் கர்நாடக அரசின், குறிப்பாக அதன் வனத்துறையினரின் தமிழர் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாதிக்கப்பட்ட அம்மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்கிட முன்வர வேண்டுமென கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன், அம்மூவரின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைத்திட தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விசிக சார்பாக வலியுறுத்துகிறோம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+