தமிழ்நாட்டில் மழை வெள்ளப் பாதிப்பு! பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்! திருமா அழைப்பு!
சென்னை: சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் வரமுடியாவிட்டால் அமித்ஷா வர வேண்டும் எனக் கேட்டுகொண்டுள்ளார்.
அதுமட்டுமல்ல சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு திருமாவளவன் எழுதிய கடிதம் வருமாறு;
''சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களை தொடர்ந்து அண்மையில் பெய்த மழை வெள்ளத்தில் தென் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மழைப்பொழிவை எதிர்கொண்டன. எனவே, இந்த மாவட்டங்களில் எல்லாம் அவசர பேரிடர் நிவாரணம் தேவைப்படுகிறது. மத்திய அரசின் உடனடி தலையீடும் மீட்புப் பணிகளுக்காக ஆயுதப் படைகள் மற்றும் என்.டி.ஆர்.எப். பணியாளர்களை அனுப்புவதும் உடனடி தேவையாக இருக்கிறது.
இதற்கிடையே மீட்புப் பணிகளுக்கு ஏதுவாக இடைக்கால நிவாரண நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். கள நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சேத மதிப்பீடுகளை செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து விரிவான நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் உடனடியாக கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.'' இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications