“இடைத்தேர்தலில் பாமக ஓட்டு திமுகவுக்கு போயிருக்கு.. ஒரு பூத்திலேயே தெரிஞ்சிக்கிட்டோம்” - திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "விசிக இருக்கும் கூட்டணிக்கு பாமக ஓட்டு போட மாட்டார்கள். அதனால், இடைத்தேர்தலில் பாமகவின் ஓட்டு திமுகவிற்கு சென்றுள்ளது" என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் நடைபெற்ற விசிக தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "இடைத்தேர்தலில் இரண்டாவது இடத்திற்கு வந்தையே பெருமையாக பேசும் நிலை. இரண்டாவது இடம் போதுமா? முதலிடம் வர கூட்டணி கட்சிகள் தேவைப்படுகின்றன. 35 மார்க் எடுத்தால் தான் பாஸ். 34 மார்க் எடுத்தால் எப்படி பாஸ் பண்ண முடியும்? ஒரு மார்க்கை வழங்கும் வாத்தியார் யார் என பார்க்க வேண்டும்?

Thirumavalavan Claims PMK Votes Went to DMK in Bypoll Due to VCK s Presence in Alliance

விசிகவை எப்படி தக்கவைக்க வேண்டும் என்பது தான் அரசியல். ஆட்சி தேவையில்லை என்றால் இரண்டாம் இடத்திலேயே இருந்திருக்கலாம். ஆண்ட கட்சி இரண்டாவது இடத்தை பெருமை பேசுகிறது. அப்படியென்றால் திமுகவின் உளவியல் என்ன?

சின்ன கட்சி, பெரிய கட்சி என்பதில்லை. வெற்றி என்பதுதான் முக்கியம். ஆட்சியை கைப்பற்றுவதற்கான வெற்றி. விசிகவுக்கு ஒரு சதவிகிதம் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் வெற்றிக்கு ஒரு சதவிகிதம் தேவை என்றால், விசிகவும் தேவைதானே?

பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்று மீண்டும் மீண்டும் நாங்கள் கூறி வருகிறோம். மதுராந்தகம் இடைத்தேர்தலில் பாமக யாருக்கும் ஆதரவு கிடையாது என்று கூறிவிட்டது. அதனால் தமிழக வெற்றி கழகத்திற்கு பாமகவினர் ஓட்டு போட்டுவிட்டதாக கூறுகிறார்கள்.

மதுராந்தகத்தில் பாமகவின் ஓட்டு திமுகவிற்கு தான் சென்றுள்ளது என ஒரு பூத்தில் இருந்த ஓட்டுகளை வைத்தே தெரிந்து கொண்டோம். விசிக இருக்கும் கூட்டணிக்கு பாமக ஓட்டு போட மாட்டார்கள். இடைத்தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் எங்கு சென்றுள்ளன? வன்னியர் வாக்குகள் எங்கு சென்றுள்ளன? ஆதாரங்கள் இருந்தால் காட்டட்டும்.

மதுராந்தகத்தில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக கூறிவிட்டது. ஆனால் பாமக ஓட்டுகள் தவெகவுக்கு விழுந்துள்ளன என பேசுகிறார்கள். பாமகவும், பாஜகவும் இருக்கும் அணியில் இருக்கமாட்டோம் என 15 ஆண்டுகளாகவே சொல்லி வருகிறோம். இதனால் பாமகவுக்கு ஒரு நன்மை உள்ளது. திருமாவளவனை வன்னியர்களிடம் பாமக எதிரியாக நிறுத்துகிறது. பாமகவினர், விசிக இருக்கும் கூட்டணிக்கு வாக்கு அளிக்கமாட்டார்கள்.

விசிக தமிழ் தேசியம் பேசுவது பலருக்கு பிடிக்கவில்லை. சீமான் உடன் அரசியல் முதிர்ச்சி உடையவர்கள் யாரும் கிடையாது. தெலுங்கு எதிர்ப்புதான் தமிழ் தேசியம் என திரிபு வாதம் செய்கிறார்கள். விசிக பேசும் தமிழ் தேசியம், மதச்சார்பற்ற மொழி வழி தேசியம். மொழி உரிமை, இன உரிமை, மாநில உரிமை. ஆகிய கோரிக்கைளை விசிக முன் வைக்கிறது.

மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவர்கள். காங்கிரஸ் விடுதலை புலிகளுக்கு எதிரான கட்சி, ஈழத்தமிழர்களை அழித்த கட்சி ஆகிய விமர்சனங்கள் உண்டு. இப்போதும் அந்த விமர்சனங்கள் உள்ளது. ஆனாலும் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். அதற்கான வலிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற காங்கிரஸ் உடன் நிற்கிறோம். அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டாலும் தமிழ் தேசிய உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்தியை எதிர்ப்போம். தமிழ் தேசியம் வளர்வது போல தெலுங்கு மொழி தேசியம் வளரட்டும். இந்தி தேசியமும் வளரட்டும், இந்தி பேசும் மாநிலங்களில் மட்டும். விசிகவின் தமிழ் தேசியம் பிற இன, மொழி வெறுப்பு இல்லை. மொழி, இன அடிப்படையில் வெறுப்பை வளர்ப்பது தவறு." எனப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+