விவாதத்தில் தாக்கி பேசிய கிருஷ்ணசாமி.. கொந்தளித்த திமுகவினர்.. கூல் செய்த திருமாவளவன்
சென்னை: ஒரு தொலைகாட்சி டிவி நிகழ்ச்சியின் விவாதத்தில் திமுகவை புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தாக்கிய பேசியதால் கோபமடைந்த கூச்சலிட்ட திமுகவினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமாதானப்படுத்தினார்.
தனியார் தொலைகாட்சி சேனல்கள் அன்றாடம் ஒரு அரசியல், சமூக பிரச்சினை சார்ந்த டாப்பிக்குகளை வைத்து அரசியல்வாதிகள், துறை சார்ந்த நிபுணர்களை வைத்து விவாதம் நடத்தி வருகின்றன.
இந்த விவாதங்களில் அடிக்காத குறையாக கருத்துகள் அனல் பறக்கும். பேசும் தலைப்புகளுக்கேற்ப அரசியலில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி பிரதிநிதிகள் அழைக்கப்படுவர். அதிலும் கட்சியினரால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளே இதில் கலந்து கொள்வர்.

விவாதம்
அந்த மாதிரி ஒரு விவாதம் தனியார் தொலைகாட்சி நிறுவனம் நடத்தியது. அதாவது தமிழகத்திற்கு தேவை திராவிட மாடலா தேசிய மாடலா என்ற தலைப்பில் மக்கள் சபை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி சென்னை திநகரில் ஜிஎன் ஷெட்டி சாலையிலுள்ள ஒரு அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.

மூத்த பத்திரிகையாளர்
இந்த நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன், பாஜக ராம ஸ்ரீனிவாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், டாக்டர் எழிலன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணசாமி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமி பேசுகையில் 1968 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் அரைப்படி நெல் கேட்டதற்காக 43 தொழிலதிபர்கள் ஒரே குடிசைக்குள் வைத்து கொளுத்தப்பட்டார்கள், இதை கண்டித்து அப்போது ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது?

விழுப்புரத்தில் நடந்தது
1978 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் 18 கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது திமுக என்ன செய்தது? 1995 ஆம் ஆண்டு கொடியங்குளத்தில் மிகப் பெரிய கலவரம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. அப்போது திமுக என்ன செய்தது? இதையெல்லாம் மறந்து இன்று நரிக்குறவர் வீட்டுக்குச் சென்று கட்டிப் பிடித்தால் எல்லாம் சரியாகிவிடுமா என கேள்வி எழுப்பினார்.

கூல் செய்த திருமாவளவன்
இவரது பேச்சு அங்கிருந்த திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கூச்சலிட தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மைக்கில் பேச எழுந்து சென்ற திருமாவளவன் கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம். கூச்சலிட வேண்டாம் என கேட்டுக் கொண்டதை அடுத்து நிகழ்ச்சி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications