Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமாவளவனுக்கு வந்த கோபம்.. "அந்த டிஎஸ்பிக்கு வரலாறு தெரியாதா.. எல்லாம் அடாவடி".. நறுக் கேள்வி

கோவை சம்பவத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "வரலாறு அறியாதவரா அந்த காவல் அதிகாரி? ஏன் கோட்சே பெயரைச் சொல்லக்கூடாது என தடுத்தார்? காந்தியடிகளைக் கோட்சே கொல்லவில்லை என்று நம்புகிறாரா? அல்லது காந்தியடிகள் கொல்லப்படவே இல்லை; வேறு காரணங்களால் இறந்தார் என கருதுகிறாரா? அல்லது அவர் காந்தியைக் கொன்றது சரி என்று கோட்சேவைக் கொண்டாடும் கும்பலில் ஒருவரா?" என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம், கோவை சிவானந்தா காலனி பகுதியில், மக்கள் ஒற்றுமை மேடை' சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்டப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

ஆனால், காவல்துறை தரப்பில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது... அதனால், 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது... உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில்,"இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட... " என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அதை அகற்றும்படி போலீசார் சொன்னார்கள்.. இதையடுத்து, அதில், "இந்து" என்கிற வார்த்தை மட்டும் மறைக்கப்பட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தொடர்ந்தது.

கோட்சே

கோட்சே

அதையடுத்து, உறுதிமொழி நிகழ்ச்சியில், "கோட்சேவால் காந்தியடிகள் கொல்லப்பட்டார்" என்று தெரிவித்தபோது போலீசார் இடைமறித்தனர்... இதனால் மறுபடியும் வாக்குவாதம் வெடித்தது.. காந்தியை சுட்டுக் கொன்றது கோட்சே, இந்து போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது' என்று காவல்துறையினர் சொன்னதாக கூறப்படுகிறது.

கண்டனம்

கண்டனம்

இதற்கு பதிலளித்த ஜி.ராமகிருஷ்ணன், "வேறு யார் கொன்றார்கள்? கோட்சே தான் என்று கோர்ட்டே தண்டனை விதித்திருக்கிறது. உங்களுக்கு தெரியாதா?" என்று கேட்டார்.. இந்த வாக்குவாதம் வலுத்த நிலையில், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பானது.. இதற்கு பல்வேறு கட்சியர், அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், விசிகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருமாவளவன்

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது: "காந்தி நினைவுநாளையொட்டி கோவையில் 'மக்கள் ஒற்றுமை மேடை' என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பில் சனாதன பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.இராமகிருஷ்ணன் சொல்லச் சொல்ல மற்றவர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது திடுமென காவல்துறையினர் அங்கே வந்து அதனைத் தடுத்துள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

காந்தியைக் கொன்றது கோட்சே என்றும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள், இந்து மதவெறியர்கள் என்றும் கூறக் கூடாது என அப்பகுதியைச் சார்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளரும் வேறு சில காவல் அதிகாரிகளும் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த நிகழ்வு மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. காவல் துறையினர் அவ்வாறு நடந்துகொண்டது ஏனென்று விளங்கவில்லை. காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி பயங்கரவாதி நாதுராம் கோட்சே தான் என்பதும், அவன் அதற்காக மரணத் தண்டணைக்குள்ளானான் என்பதும் வரலாற்று உண்மை.

 கோட்சேவை கொண்டாடும் கும்பல்

கோட்சேவை கொண்டாடும் கும்பல்

இந்த வரலாறு அறியாதவரா அந்த காவல் அதிகாரி? ஏன் கோட்சே பெயரைச் சொல்லக்கூடாது என தடுத்தார்? காந்தியடிகளைக் கோட்சே கொல்லவில்லை என்று நம்புகிறாரா? அல்லது காந்தியடிகள் கொல்லப்படவே இல்லை; வேறு காரணங்களால் இறந்தார் என கருதுகிறாரா? அல்லது அவர் காந்தியைக் கொன்றது சரி என்று கோட்சேவைக் கொண்டாடும் கும்பலில் ஒருவரா? அவரும் அவரோடு வந்த அதிகாரிகளும் நடந்துகொண்ட போக்குகள் மற்றும் அணுகுமுறைகள் வன்மையான கண்டனத்துக்குரியது.

கருத்துரிமை

கருத்துரிமை

சமூகநீதி அரசின் கீழ் பணியாற்றும் காவல்துறையினர், மதவெறிபிடித்த இயக்கங்களைச் சேர்ந்தவர்களைப் போல நடந்திருப்பதை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில் மதம் சார்ந்து செயல்படும் காவல்துறையினரின் இந்தப் போக்குக் கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத அடாவடிப்போக்கு மட்டுமின்றி, மதவாத நடவடிக்கையுமாகும். எனவே, மதசார்பின்மைக்கெதிராகச் செயல்பட்டுள்ள காவல் அதிகாரியின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+