விசிகவை திமுக விழுங்கிவிடுமா? கூட்டணியால் எங்களுக்கு வளர்ச்சிதான்! அடித்து சொல்லும் திருமாவளவன்
சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திலிருந்து, திமுகவின் கூட்டணிகள் திமுகவுக்கு ஜால்ரா போடுகின்றன என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். மிக குறிப்பாக, விசிகவை திமுக விழுங்கிவிடும் என்று விமர்சித்திருந்தார். இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பதில் கவனம் பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் இன்னும் 8 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் தொடங்க இருக்கிறது. தேர்தலுக்கான பிரச்சார பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அதிமுக சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று தஞ்சாவூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் என்று எச்சரித்திருந்தார். இந்நிலையில் அவரது விமர்சனத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதில் அளித்திருக்கிறார். திருமாவளவன் பேசியதாவது
"அதிமுகவை பாஜக விழுங்கி செரித்து விடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் மீண்டும் பொறுப்புணர்வோடு எச்சரித்தது. அதிமுக பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்கிற நல்லெனத்தோடு நாங்கள் சுட்டிக் காட்டி இருந்தோம். ஆனால் அதை அப்படியே திருப்பி விடுதலை சிறுத்தைகள் கட்சியை, திமுக விழுங்கிவிடும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்.
அவருக்கு இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லி கொடுத்திருப்பார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். அவராகவே இந்த கருத்தை சொல்கிறார் என்று என்னால் ஏற்க முடியவில்லை. அதிமுகவுக்கு எதிராக நான் பேசுவதாக அவர் நினைக்கிறார் என்று கருதுகிறேன்.
அதிமுக தொண்டர்கள் நான் எதற்காக சொல்கிறேன் என்பதை கட்டாயம் நன்கு உணர்வார்கள். அதனை எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் உணர்வார். ஆனால் சேராத இடம் தன்னில் சேர்ந்திருக்கிற சூழலில் அவர் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று நான் கருதுகிறேன்.
கடந்த 2001 இல் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓரிரு பொதுத் தேர்தல்களை தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியுடன் தான் பயணிக்கிறது மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து இன்றைக்கு ஒரு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று இருக்கிறது வளர்ச்சியடைந்திருக்கிறது தவிர வீழ்ச்சி அடையவில்லை ஆகவே இதை அவர் திரித்து பேசுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
வெளிச்சம் டிவி என்னுடையது! விசிகவுக்கும் சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! பனையூர் பாபு பரபரப்பு -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்?












Click it and Unblock the Notifications