விசிக அங்கம் வகிக்கும் அணிக்கே வெற்றி! பூரித்த திருமாவளவன்! அப்போ 2026 தேர்தல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெறும் என்பதை உறுதிப்படுத்திய வாக்காளர்களுக்கு நன்றி என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் 'மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'யின் சார்பில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும்சத்யபாமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றிருப்பது இக்கூட்டணிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும்.

Thirumavalavan

கடந்த பொதுத் தேர்தலில் இவ்விருதொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தவெக, தற்போது கணிசமான வாக்குகளின் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது எமது கூட்டணியை மட்டுமின்றி, 'கூட்டணி அரசு' என்கிற தவெக தலைவர் ஜோசப் விஜய்யின் மகத்தான நிலைபாட்டையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதையே உணர்த்துகிறது.

விசிக அங்கம் வகிக்கும் அணியே

'விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெறும்' என்பதை உறுதிப்படுத்தும் வகையில், முழுமையான ஈடுபாட்டுடன் களப்பணி ஆற்றிடவேண்டுமென நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தவெக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சார்ந்த தோழர்களுடன் இணைந்து திறம்பட செயலாற்றிய என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும், வாக்காளப் பொதுமக்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கூட்டணி நல்லாதரவு

கூட்டணியின் நல்லாதரவோடு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் கூட்டணியின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்! இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம்

மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

தாராபுரம்

தாராபுரத்தில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து முடிந்தது. இதில் மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் - 70916, திமுக வேட்பாளர் பரந்தாமன் 51672, அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 46,436, நாதக ஜானகிராமன்- 2113, சிபிஎம் வேட்பாளர் சுகந்தி- 1576 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

எத்தனை வாக்குகள்

அது போல் தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா- 66841, திமுக வேட்பாளர் சுகன்யா- 57370, அதிமுக வேட்பாளர் பானுமதி- 45280, நாதக வேட்பாளர் கார்த்திகா- 5268, சிபிஐ வேட்பாளர் லட்சுமணன்- 1,157 வாக்குகளையும் பெற்றனர்.

கூட்டணி கட்சி

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கூட்டணி கட்சியினரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டபடி இது தவறு என திமுக, அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கூட்டணி கட்சி தலைவர்கள் இடம் பெற்றிருந்த பட்டியல் வாபஸ் பெறப்பட்டது.

முதல்வர் அறிவிக்கவில்லை

மேலும் இரு தொகுதிகளிலுமே முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்த போது கூட்டணி கட்சிகளை சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகளை மேடை ஏற்றவில்லை. அவர்களின் பெயர்களை கூட மைக்கில் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அதிருப்திகளால் தவெகவுக்காக கூட்டணி கட்சியினர் யாரும் பணியாற்றவில்லை என்றும் அரசியல் பார்வையாளர்கள் முன் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2026 தேர்தல்

மேலும் விசிக அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெறும் என்பதை மக்கள் நிரூபித்துவிட்டதாக கூறும் திருமாவளவன், கடந்த சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து என்ன சொல்ல போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+