Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐகோர்ட் அனுப்பிய சுற்றறிக்கையில் உள்நோக்கம்.. அம்பேத்கர் படத்தை அகற்ற திட்டம்.. திருமாவளவன் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Thirumavalavan has condemns Chennai High Courts circular as having ulterior motives

உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படம் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இது உள்நோக்கம் கொண்ட சுற்றறிக்கை என்று விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், "உயர்நிதிமன்ற பதிவாளர் அண்மையில் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை தருகிறது. திருவள்ளுவர் மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே நீதிமன்ற வளாகங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும் என ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்கள்.

இது திட்டமிட்டு புரட்சியாளர் அம்பேத்கரின் படங்களையும், சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையாக இருக்கிறது. இந்த சுற்றறிக்கையை உயர்நீதிமன்றம் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+