இந்து அல்லாதோர்கள் கோயிலுக்குள் நுழைய கட்டுப்பாடு! அறநிலையத்துறை சட்டத்தை திருத்துங்க.. திருமாவளவன்
சென்னை: இந்து அல்லாதோர் பழனி கோயிலுக்குள் நுழைய சில கட்டுப்பாடுகளை சமீபத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்திருந்தது. இந்நிலையில், இந்து அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் நுழைய கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கோயில் நிர்வாகம் சார்பில் இந்த பலகை அகற்றப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 30ம் தேதி முக்கிய உத்தரவு ஒன்றை போட்டது.

அதில், "இந்து அல்லாதவர்கள் கோயிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது. இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும். மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோயிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும்.
அந்த பதிவேட்டில் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்தரவாதம் "உறுதிமொழி" எழுதிக் கொடுத்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கலாம். இந்து அறநிலையத்துறை ஆணையர் கோயிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்" என நீதிபதி கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அனைவரும் கோயிலுக்குள் நுழையும் வகையில் இந்து அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அசோக் நகர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமானதுதான் இந்து அறநிலையத்துறை சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்பது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"இந்துக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக கோயில்களில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்து இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் மேற்கோள் காட்டி அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 24 (4) கோயிலுக்குள் அறநிலையத்துறை அதிகாரிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்படுகிறவர்கள் செல்வதற்கு வழிவகை செய்கிறது. அப்படி செல்லும்போது யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் நீதிமன்ற ஆணையைப் பெற்று சப் இன்ஸ்பெக்டர் தகுதிக்குக் குறையாத காவல்துறை அதிகாரியின் உதவியோடு செல்லலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த அதிகாரிகள் கோயில் கருவறைக்குள்ளே சொல்ல வேண்டும் என்றால் அதற்கு உரிய காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்தப் பிரிவு சொல்கிறது. அத்துடன் இந்து அல்லாதவர்கள் யாரும் கோயில்களுக்குள் செல்வதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் படி அதிகாரிகள் செல்வதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் சட்டப்பிரிவு 24 (4) இந்து அல்லாதவர்கள் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கின்ற காரணத்தினால் இந்து அல்லாத காவல்துறை அதிகாரிகளும் கோயிலுக்குள் நுழைய முடியாது என்று ஆகிறது.
இது காவல்துறையினரை மத ரீதியில் பாகுபடுத்துவதாக உள்ளது. எனவே இந்து அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவு 24 (4)ல் உரிய திருத்தம் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் இந்து அறநிலையத்துறை சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications