"அமித்ஷாவை வர சொல்லுங்க".. திருமாவளவன் போட்ட சவால்.. பாஜகவின் நெத்தியடி.. ஒன்று திரண்ட "சிறுத்தைகள்"
திருமாவளவன் குறித்த கருத்துக்கு தமிழக பாஜக பதிலடி தந்துள்ளது
சென்னை: "அம்பேத்கர் குறித்து பேசுவதற்கு மோடிக்கு தகுதியில்லை. நேருக்குநேர் விவாதிக்கலாம் மோடி, அமித்ஷாவை வரச் சொல்லுங்கள்" என்று திருமாவளவன் சவால் விட்டதற்கு தமிழக பாஜக பதிலடி தந்துள்ளது.
கடந்த இரு தினங்களாகவே, இளையராஜா கருத்து குறித்து சர்ச்சைகள் கிளம்பி கொண்டிருக்கின்ற்ன.. விவாதங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.. கண்டனங்கள் பறந்து கொண்டிருக்கின்றன,.
ஒருவரை பாராட்டுவதும், புகழ்வதும் அவரவர் தனிப்பட்ட உரிமை என்றாலும், அம்பேத்கருடன் எப்படி மோடியை ஒப்பிடலாம்? என்ற பொதுப்படையான கேள்வியை பெரும்பாலானோர் எழுப்பி வருகிறார்கள். இதனால் இளையராஜாவை விமர்சித்தும் கருத்துக்கள் எழுப்பபப்படுகின்றன.

இளையராஜா
ஆனால், விசிக தலைவர் திருமாவளவன் மட்டும், இளையராஜா பாவம் என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.. "சமூகத்தில் யார் மக்களோடு நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களை சந்திப்பது தான் ஆர்எஸ்எஸ்கார்களின் நோக்கம்... ஆர்எஸ்எஸ்காரர்கள் அப்படி இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும்.. அம்பேத்கர் மோடி சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்களும் என்ற புத்தகத்தை கொடுத்து அணிந்துரை கேட்டிருக்கிறார்கள். அவரும் 2 பக்கம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

மோடி
அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என்றுதான் இசைஞானி சொல்லியிருக்கிறார். மற்றபடி, மோடியை எப்படி அவர் விமர்சித்து இருப்பார் என்று சொல்ல முடியாது. சனாதன கும்பலின் முதல் எதிரி அம்பேத்கர். ஆர்.எஸ்.எஸ் யின் அரசியலை இறுதி மூச்சுவரை மூர்க்கமாக எதிர்த்தார் அம்பேத்கர். இசைஞானி இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே ஆர்எஸ்எஸ்ன் முக்கிய நோக்கம்... இளையராஜா பாவம்.. நான் இரக்கம் காட்ட விரும்புகிறேன்" என்று மிக நீண்ட விளக்கத்தை நேற்றைய தினம் திருமாவளவன் கூறியிருந்தார்.

திருமாவளவன்
திருமா இப்படி பேசியிருந்தது வழக்கம்போல் பாஜகவுக்கு கடுமையான டென்ஷனை உண்டுபண்ணி வருகிறது.. தமிழக பாஜக திருமாவளவனின் இந்தபேச்சுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.. பாஜகவின் திருப்பதி நாராயணன், திருமாவளவன் பேசியதில் இருந்து 2 கருத்துக்களை தனியாக எடுத்து, 2 விதமான ட்வீட்களை போட்டுள்ளர்.. முதல் ட்வீட்டில், "இளையராஜா பாவம்.. ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் அவரை சந்தித்து இருப்பார்கள் என நினைக்கிறன் - திருமாவளவன்".. திருமாவளவன் பாவம் அல்ல. அப்துல் நாசர் மதானியை சந்தித்த காரணத்தால்" என்று பதிவிட்டுள்ளார்.

திருமா - பாஜக
அதேபோல, இன்னொரு ட்வீட்டில், "அம்பேத்கர் குறித்து பேசுவதற்கு மோடிக்கு தகுதியில்லை. நேருக்குநேர் விவாதிக்கலாம் மோடி, அமித்ஷாவை வரச் சொல்லுங்கள்" - திருமாவளவன்".. மோடியுடன் விவாதிக்க திருமாவளவனுக்கு தகுதியும் இல்லை, அருகதையும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான சிறுத்தைகள் திரண்டு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்..
Recommended Video

பாஜக நாராயணன்
"அண்ணாமலைக்கு திருமாவிடம் பேசுவதற்கு தகுதியும் இல்லை, அருகதையும் இல்லை, திருமாவிடம் 4 எம்எல்ஏ 2 எம்பி இருக்கின்றனர்.. அந்த தகுதியை வளர்த்து கொண்டு, திருமாவிடம் விவாதிக்க நேரம் கேட்கட்டும்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.. இன்னொருவரோ, "மோடி, அமித்ஷா இருவரும் நாடாளுமன்றத்திலோ, வேரிடத்திலோ திருமாவளவன் அவர்கள் மட்டுமல்ல வேறு யாரோடும் விவாதிக்க தகுதியற்றவர்கள், இதை 8 வருடமாக பார்த்து வருகிறோம்.. அவர்களின் ஒரே தகுதி, மதவாதமும் வட இந்தியாவில் உள்ள இந்துக்களின் மூடத்தனமே" என்று பதிவிட்டுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications