Thirumavalavan: பெயரைத் தானே மாற்றியிருக்காங்க.. திட்டங்களை கைவிடலயே.. விஜய் அரசை பாராட்டிய திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய திட்டங்களை முற்றாக கைவிடாமல், அந்த திட்டத்தை பெயர் மாற்றம் மட்டும் செய்து அதே திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பாராட்டுக்குறியது என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்து இரண்டே மாதங்களில், தவெக அரசு அனைத்து வாக்குறுதிகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி வலியுறுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

வன்னி அரசு அமைச்சராக இருக்கிற சமூக நீதித்துறைக்கு கடந்த காலங்களை விட கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பல திட்டங்களுக்கு நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டதற்கு முதல்வர் விஜய்க்கு, நிதியமைச்சருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்து கொள்வதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

Thirumavalavan Kudos to Vijay for continuing existing schemes without hating them remarks on the TN budget

வன்னி அரசு துறைக்கு நிதி அதிகரிப்பு

தமிழகத்தில் தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. தவெக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. விசிக தலைவர் தொல் திருமாவளவனும் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

வன்னி அரசு அமைச்சராக இருக்கிற சமூக நீதித்துறைக்கு கடந்த காலங்களை விட கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அயல்நாடுகளில் படிக்கக் கூடிய மாணவர்களின் கல்வி உதவித் தொகை உயர்த்தப்பட்டு பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

முதல்வர் விஜய்க்கு பாராட்டுக்கள்

பண்டிதர் அயோத்தி தாசர் வீடு கட்டும் திட்டம் அதுவும் அப்படியே அதே பெயரில் நீடிக்கிறது. நிதி ஒதுக்கீடும் இதற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. எளிய மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும், கல்வி ரீதியாக மேம்படுத்தவும் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்பதற்கு இந்த துறைகளுக்கு என ஒதுக்குப்பட்டு இருக்கிற கூடுதல் நிதியில் இருந்தே தெரிகிறது. இதற்காக இந்த நிதியமைச்சருக்கும், முதல்வர் விஜய்க்கும் எனது பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கலைஞரின் வீடு கட்டும் திட்டம் என்ற பெயர் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக வெற்றி வீடு திட்டம் என மாற்றப்பட்டுள்ளதாக கூறியதை அறிந்தேன். அது போல பல திட்டங்கள் பெயர் மாற்றப்பட்டு இருப்பதும் தெரியவருகிறது. இது வழக்கமான ஒன்று தான். ஒரு சில திட்டங்களை தவிர, பெரும்பாலும் கட்சி ஆளும் கட்சியாக மாறும் போது பெயர் மாற்றம் செய்வது வாடிக்கையான ஒன்று தான். ஆனால் அந்த திட்டங்கள் அப்படியே இருக்கிறது என்பதை பொறுத்தவரையில் வரவேற்கிறோம். பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம்.

பெயர் மாற்றம் - வரவேற்கிறோம்

திட்டத்தை முற்றாக கைவிடாமல், அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என உதறாமல், அந்த திட்டத்தை பெயர் மாற்றம் மட்டும் செய்து அதே திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பாராட்டுக்குறியது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டே மாதங்கள் தான் ஆகின்றது.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எல்லாம், 6 மாதங்கள் பொறுத்து இருப்போம். தவெக அரசு ஆட்சி நிர்வாகத்தை எப்படி முன்னெடுத்து செல்கிறது என்று பொறுத்து இருந்து பார்போம் என சொல்லியிருக்கிறார்கள். 2 மாதங்களை மட்டுமே நிறைவு செய்து இருக்கிற தவெக அரசு அனைத்து வாக்குறுதிகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி வலியுறுத்த முடியாது. ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+