"கலைஞ்சிடும்".. ஸ்டாலின் ரொம்ப பேசினால் அவ்ளோதான்.. தோத்துடுவீங்க, திருந்துங்க.. சொல்றது யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: . தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருக்கிறது... ஆளுநர் கையில் தகவலும், தரவுகளும் இருக்கின்ற காரணத்தால் பேசுகிறார்... ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும்" என்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

கோவை தேர்நிலை திடலில் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு பின்னர் பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசையும், திருமாவளவனையும், சீமானையும் கடுமையாக சாடினார்.

Thirumavalavan news: BJP Sr leader H Raja slams dmk government and tamil nadu police

தமிழக காவல்துறையையும் எச்.ராஜா விட்டுவைக்கவில்லை.. அத்துடன் திமுக தரப்பு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் எச்.ராஜா.

திருமாவளவன், சீமான்: எச்.ராஜா பேசும்போது, "PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்) உட்பட 8 அமைப்புகள் மத்திய அரசால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. தடைக்கு மறுநாள் தமிழ்நாட்டில் திருமாவளவனுக்கும், சீமானுக்கும் மனித சங்கிலி நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது... அது மனித சங்கிலி அல்ல. சங்கிலியின் ஒரு பிட்டு தான். ஆங்காங்கே 10 பேர் நின்று மனித சங்கிலி நடத்த அனுமதி தந்துள்ளார்கள். ஆனால் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பேரணிக்கு இவர்கள் தடை விதித்து வந்தார்கள்..

சென்னை உயர்நீதிமன்றம் 45 மாவட்டங்களிலும், அதற்கான அனுமதி கொடுக்க அறிவுறுத்தியும், காசை செலவு செய்து, பெரிய பெரிய வக்கீல்களை வைத்து, உச்ச நீதிமன்றம் சென்று தடை விதிக்க கூறினார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று சொல்லிவிட்டது.. எனக்கு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தமிழக அரசு, டிஜிபி இவங்கெல்லாம் யாருக்காக இருக்கிறார்கள்? தேசதுரோகிகளுக்கா? பயங்கரவாதிகளுக்காக? தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றி பேசக்கூடாதாம்?

தமிழ் தேசிய இயக்கம்: நீங்க பிரதமரையே பேசறீங்களே.. இந்த மாநில அரசு தேச துரோகிகளின் அரசு அப்படிங்கிறதை ஹெச்.ராஜா பலமுறை சொல்லி இருக்கேன்.. அது நேற்று நிரூபிக்கப்பட்டுள்ளது. என்ன பிரச்சனை நடந்தது? தமிழகத்தில் காவல்துறை மற்றும் அரசாங்கம், பிரிவினைவாத தீய சக்திகள் குறிப்பாக தனி தமிழ்நாடு கேட்கும் தமிழ் தேசிய இயக்கங்கள், திருமாவளவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
அவர் தேச துரோகிதானே? அவரை ஏன் வெளியே விட்டு வைச்சிருக்கீங்க? அவருக்கு சட்டம் போடறது யார்? சைக்கிள்ல் போய் செல்பி எடுத்து, அதை பேஸ்புக்ல மட்டும் போட்டுக்கொள்ளும் டிஜிபிக்கு அந்த தைரியம் வருமா? நேற்று பழனியில் போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து, காவல்துறையினரை புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அது ரவுடித்தனமான கட்சி.. அந்த தீய சக்திகளை செயல்பட அனுமதித்து விட்டு, தேசபக்த சக்திகளை நசுக்கணும்னு பார்க்கறீங்க.. அது உங்களால் முடியாது. ஒவ்வொரு முறையும் தோற்றுதான் போவீர்கள்.. இந்த 45 இடங்களில் நடந்துள்ள ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றுள்ளது. இனிமேலாவது திருந்துங்கள்.

கொள்ளிக்கட்டை: நான் ஓராயிரம் முறை சொல்லுவேன், பி எஃப் ஐ தேசத்துரோகிகள். அதனால்தான் அவர்கள் தடை செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒரே நாளில் 19 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வன்முறை வாதிகள், பயங்கரவாதிகள். ராகுல் காந்தி ஒரு சாதியை இழிவாக பேசினார் என்பதால் அந்த சாதியை சேர்ந்த ஒரு நபர் வழக்கு தொடுத்தார். அதற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ராகுல் காந்தி கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்கிறார். பாஜகவிற்கு பெரிய பிரசார பீரங்கியே ராகுல் காந்திதான். ராகுல் காந்தி பேசி விட்டு வந்தால் பத்தாயிரம் ஓட்டுக்கள் எங்களுக்கு அதிகமாக தான் விழும்.

பச்சை பொய்: பாஜக தலைவர் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர்கள் 17 பேரும் நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யட்டும். அண்ணாமலை சொல்லியது அனைத்தும் பொய். இந்த சொத்து எதுவும் எங்களுடையது இல்லை என தாக்கல் செய்யட்டும். அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைவர், அவர் வெளியிட்டது பாஜக கட்சியின் கருத்துதான். தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருக்கிறது... ஆளுநர் கையில் தகவலும், தரவுகளும் இருக்கின்ற காரணத்தால் பேசுகிறார். ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும்" என்றார் எச்.ராஜா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+