வடமாநிலத்தவர்களுக்கு வாக்கு உரிமை.. தமிழக அரசியலே மாறிவிடும்.. திருமாவளவன் வார்னிங்!
சென்னை: வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாகச் சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிப்போகும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள திருமாவளவன், எந்த மாநிலத்தவராக இருந்தாலும், அவர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டப்படி ஒருவர் எந்த தொகுதியில் வசிக்கிறாரோ, அந்த தொகுதியில் தான் அவர் வாக்களிக்கத் தகுதி உடையவராக இருக்கிறார். அதன் அடிப்படையில் பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்றது. அதன்படி, பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்குக் குடி பெயர்ந்தவர்கள் பெயர் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எந்த மாநிலத்தில் எந்த தொகுதியில் வசிக்கிறார்களோ, அங்கு அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கணக்கின்படி பார்த்தால், சுமார் 6.5 லட்சம் பீகார் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் பணி செய்து வருகிறார்கள். இவர்களின் பெயர்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், இனி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.
சென்னையில் மட்டும் 3.5 லட்சம் பீகார் வாக்காளர்கள் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் அதிகளவில் இருப்பார்கள். இதனால் வெளிமாநில வாக்காளர்கள் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டால், அது தமிழ்நாட்டின் அரசியலிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், பீகாரில் நடக்கும் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் SIR என்ற பெயரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் போன்ற மக்களின் வாக்குகளை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. ஆதார் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைக் கோருகிறார்கள். கிட்டத்தட்ட சிஏஏ சட்டத்தை அமல்படுத்தும் விதமாகத் தேர்தல் ஆணையம் இதை ஒரு சோதனை முயற்சியாகச் செய்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.
இதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அவர்கள் விவாதிக்க தயாராக இல்லை. இதே நடவடிக்கையைப் பிற மாநிலங்களிலும் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டிலும் தேர்தல் வரவுள்ள சூழலில், தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை தமிழக வாக்காளர்களைப் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. வடமாநிலங்களில் இருந்து வேலை செய்வோர் லட்சக்கணக்கானோர் உள்ளனர்.
அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் முயற்சி இருப்பதாகத் தெரிகிறது. பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கக் கூடிய சிறுபான்மையினர், தலித்துகள் வாக்குகளை நீக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே, இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. விசிக சார்பாக வழக்குத் தொடுத்துள்ளோம். நீதிமன்றம் மூலமாகத் தீர்வு காணும் அதே வேளையில், அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி எதிர்கொள்ளக் கூடிய நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று திமுகவிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். லட்சக்கணக்கான வடமாநிலத்தவர் வாக்காளர் பட்டியலில் இணைந்தால், தமிழ்நாடு அரசியல் தலைகீழாக மாறிப்போகும். எந்த மாநிலத்தவராக இருந்தாலும், அவர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications